ஓய்வுநாளின் பெயர்கள்......

ஓய்வுநாளின் பெயர்கள்
1.பரிபூரண நாள்:
தேவன் எல்லாவற்றையும் அதாவது ஆறு நாளுக்குள் நேர்த்தியாக முடித்தார். இனி குறைவு ஒன்றும் இல்லை என்பதை அறிந்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். ஆகவே நாமும் ஆறுநாளின் பரிபூரணத்தை அடைய வேண்டுமானால் இந்த நாளுக்குள் நாம் நுழைந்தே ஆக வேண்டும். மேலும் இந்த நாள் தேவன் பரிபூரணமானவர் என்பதையும் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
2.ஆராதனை நாள்:
தேவன் இந்த நாளை ஓய்வாக நமக்கு தந்ததற்கு காரணம் என்னவென்றால் அவரை நாம் ஆராதிக்கும்படியாகவும், அவருடைய மகத்துவங்களை ஜனங்கள் பார்க்கும்படியாகவும் என்பதை மறக்க வேண்டாம். நாம் அவரை மாத்திரமே ஆராதனை செய்ய வேண்டும் ஏனென்றால் வேதம் சொல்லுகிறது அவர் தம்முடைய ஆராதனையை வேறு யாருக்கும் தருவதில்லை.
3.கிருபையின் நாள்:
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனைப் பார்த்து ஏழாம் நாளில் நாங்கள் ஓய்ந்திருந்தால் நான்களும் எங்கள் பிள்ளைகளும் சாப்பிடும்படியான போஜனத்தை யார் தருவார்? என்று தேவனிடம் கேட்டதற்கு, அதற்கு தேவன் கொடுத்த பதில் இந்த நாளை எனக்கு கொடுப்பீர்களானால் ஆறுநாளின் பலனை இரட்டிப்பாக மாற்றித் தருவேன் அதாவது என்னுடைய கிருபையை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் அளிப்பேன் என்பதாகும்.
4.ஆசீர்வாதமான நாள்:
ஆறுநாளின் பலனை நாம் முழுமையாக சாப்பிட வேண்டுமானால் அதாவது நாமும் நம்முடைய தலைமுறையும் அனுபவிக்க வேண்டுமானால் தேவனுடைய ஏழாம்நாளின் ஆசீர்வாதம் நமக்கு வேண்டும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்.
5.பெருக்குகிற நாள்:
இன்று அனேகர் தங்களுடைய செல்வத்தை பெருக்குவதற்காக அவர்கள் செய்கிற காரியம் ஏழுநாளையும் தங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இதனிமித்தம் என்ன நடக்கிறது அவர்களுடைய மரணம் மட்டும் குறைவே காணப்படுகிறது. ஆனால் இந்த நாளில் நாம் தேவனிடம் வருவோமானால் 5 அப்பம் 2 மீன்களை பெருக்கினது போல நம்முடைய குறைவுகள் பெருகும் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.
6.ஒருமுக[மன] நாள்:
இந்த நாளில் தான் பல பிரிவுகளை உடையவர்கள் அதாவது ஆறுநாளின் பிரிவுகள் ஒன்று கூடுகிற நாள் ஆகவேதான் தேவன் சொன்னார் எங்கே இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினிமித்தம் ஒன்று கூடுகிறார்களோ அங்கே நான் இருக்கிறேன் என்றார். ஆகவே நாம் ஒருமனதோடு இந்த நாளில் கூடி இயேசுவின் நாமத்தை உயர்த்துவோமாக.
7.மனமகிழ்ச்சியின் நாள்:
ஆறு நாளும் வேலையினிமித்தமாகவோ, குடும்ப பிரச்சனையின் நிமித்தமாகவோ அல்லது வேறு பலவித பிரச்சனைகளின் நிமித்தமாகவோ பல துன்பங்களை நாம் அனுபவிக்கலாம் ஆனால் இந்த ஒய்வுநாளில் நம்முடைய ஆறுநாளின் துக்கங்கள் ஒரு நிமிஷத்தில் மனமகிழ்ச்சியாக மாற்றப்படும். என்பதில் சந்தேகமேயில்லை. ஏனென்றால் இந்த நாளின் தலைவர் யார் என்றால்? சந்தோஷத்தை மட்டும் தருகிற இயேசு கிறிஸ்துவே ஆவார்.
நாம் ஆசரிக்கிற ஓய்வுநாளில் இந்த நாட்கள் எல்லாம் அடங்கியிருக்கிறா? அப்பொழுதுதான் அந்த நாள் ஓய்வுநாள் என்று அர்த்தம் கொள்ளும்.......

Comments