இக்கால நோவா!

இக்கால நோவா!

விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். (எபிரெயர் 11:7)

முழு உலகமும் அழிக்கப்பட்டபோது, ஒரே ஒரு குடும்பம் காப்பாற்றப்பட்டது. அது நோவாவின் குடும்பம்!

நீதியான வாழ்க்கை, தேவ கிருபையை பெருகச்செய்தது! தேவகிருபை நோவாவை அநீதியான உலகத்தில் தொடர்ந்து நீதியாய் வாழச்செய்தது!

அழகானதோர் உடன்படிக்கைக்கு நோவாவை உரிமையாளர் ஆக்கியது! பெரும் அழிவுக்குப் பின்னர் கிருபை வானவில் உடன்படிக்கையாய் இறங்கியது!

ஒருவரது நீதி, அவர்தம் குடும்பத்தையே காப்பாற்றியது! நம் குடும்பத்தின் பாதுகாவல் நம் கைகளில் உண்டென்பதை மறக்கக்கூடாதே!

இது கோணலும், மாறுபாடுமான உலகம். அதில் தேவ கிருபை தேவையான நபர்களை தேடிக்கொண்டு இருக்கிறது.. குடும்பத்தை காப்பாற்ற, சபையை காப்பாற்ற, ஊழியத்தை காப்பாற்ற, ஆத்துமாக்களை காப்பாற்ற, இக்காலத்தில் நோவா நாம் தான்.. நீதியாய் நடந்தால் நம்மை சுற்றிலும் கிருபை அதிகமாய் பெருகும்.. ஆண்டவருடைய வருகை சீக்கிரம் அவருடைய கிருபையே நம்மைத் தப்புவிக்கும்! உணர்ந்து செயல்படுவோம்! ஆமென்!

Comments