உகந்த உபவாசம்!
உகந்த உபவாசம்!
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். (ஏசாயா 58:7)
உணவு உண்ணாமல் இருப்பது உபவாசம் அல்ல.. உணவு உண்டாலும் பசியோடு இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதே கர்த்தருக்கு உகந்த உபவாசம்!
உபவாசம் உடலுக்கு நல்லது.. ஆனால் இயலாதோருக்கு உதவி செய்வதோ, தேவனோடு உள்ள உறவுக்கு நல்லது..
ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவி செய்யாமல் நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் அர்த்தம் ஏதுமில்லை!
தேவையுள்ள ஜனங்களை கடந்து செல்வது, என்பது தேவனைக் கடந்து செல்லுவதே!
கட்டளைகளோடு கூடிய செயல்பாடுகள் அல்ல.. மனசாட்சியோடு கூடிய தான தருமங்களே தேவனுக்கு முன்பாக நம்மை நிறுத்தும்.. அப்படிப்பட்டவர்கள் இறைக்கப்படும் கிணறு போன்றவர்கள்.. தண்ணீர் வற்றுவதற்கு வாய்ப்பே இல்லை.. உபவாசம் இருப்பதோடு உதவிகளும் செய்யாவிட்டால் அந்த உபவாசம் ஆனது தேவனுக்கு உகந்ததாக நிச்சயம் இராது! ஆமென்!

Comments
Post a Comment