இயேசு கிருஸ்துவை சிலுவையில் அறைந்த போது

யேசு கிருஸ்துவின் சிலுவை மரணம்...

யேசு  கிருஸ்துவை சிலுவையில் அறைந்த போது அவருக்கு ஏற்ப்பட்ட அந்த கொடுரமான வலி எப்படி இருந்தது...


கிருஸ்து சிலுவையில் அறையபட்ட சம்பவம் எவ்வளவு பயங்கரமானது என்பதையும் கிருஸ்த்துவின் இரத்தம் எவ்வளவு அற்புதமானது என்பதையும் சற்று நிணைத்து பாருங்களேன்..

கிருஸ்துவின் சிலுவை மரணம் மெதுவாகவும் மிகுந்த வேதனையோடும் நடந்தது. கூடுதலாக அது கொடிய வலியை கொடுக்க கூடியதாக இருந்தது.

மேலும் ,அது பொது இடத்தில் திறந்த வெளியில் நடந்த சம்பவம் என்பதால் சிலுவையில் அறையப்பட்ட யேசு கிருஸ்து ஏறத்தாழ நிர்வாண நிலையில் இருக்கும் போது வெட்கத்தையும்,எண்ணற்ற பூச்சிகளுக்கு சுலபமான ஒரு வேட்டையாடும் பொருளாக கிருஸ்துவின் உடல் அந்த சிலுவையில் தொங்கிகொண்டிருந்தது.
ஆரம்பத்தில் இந்த தண்டணை முறை அடிமைகளுக்கும் புரட்சியாளர்களுக்கும் தான் ஒதுக்கி வைக்கபட்டிருந
்தது..கிருஸ்துவின் நாட்களில் கூட மிகவும் கிழ் தரமான குற்றவாளிகளே சிலுவையில் அறையபட்டனர்..

.
இதோ சிலுவை மரணத்தின் வலி...
சிலுவையில் அறையப் படுபவரை மிகுந்த சித்திரவதைக் கருவியான சிலுவையின் மேல் மல்லாக்காக கால்களை நீட்டி படுக்க வைப்பார்கள்
அவருடைய கரங்களை விரித்து சிலுவையின் குறுக்கு கட்டைகளோடு இணைத்து வைப்பார்கள்.

பிறகு உள்ளங்கைகளை விரித்து வைத்து, முதலில் வலது உள்ளங்கையின் மத்தியிலும் இரண்டாவது இடது உள்ளங்கையில் நடுவிலும், மிகுந்த கூர்மையுள்ள பெரிய ஆணியை வைத்து கைகளினூடே துளைத்து கொண்டு போய் மரத்துடன் இறுக்கும் படி மரச் சுத்தியலால் அடிப்பார்கள்.

கை நசுங்கி நரம்புகளையும். தசைகளையும் பிளந்து கொண்டு போகும்போது மிகுந்த வேதணையைக் கொடுக்கும். பிறகு, கால்களை முழுமையாக இழுத்து நீட்டி வைக்க படும்.
மற்றுமொரு பெரிய ஆணியை பாதங்களின் மேல் தனி தனியாகவோ, அல்லது ஒன்றின் மீது ஒன்றை வைத்தோ, நரம்புகளும் தசைகளும் துடி துடிக்க, இரத்தம் ஒழுக,ஒழுக ஆணிகளை அடித்து மரத்துடன் இறுக்குவார்கள்...

.
பிறகு சாபத் தீட்டான அந்த மரம் எந்த வித ஆதாரமுமில்லாமல் உயிருள்ள மனிதனின் சரீரம் முழுவதும் தொங்கும் பொழுது அதன் பாரன் அழுத்துவதால் உண்டாகும் சரீர வேட்தனையும் பாடுகளும் மேலும் புதிய சித்திர வதையைக் கொடுக்கத் தக்கதாக கைகளிலும் கால்களிலும் துவாரம் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு திணறல் ஏற்பட பலமான கரங்களை கொண்டு சிலுவையை தூக்கி, அதற்கென வெட்டப்பட்ட குழியில் நிறுத்துவார்கள்.

சிலுவையின் கீழ்முனைப் பலமாக பொருத்தப் படும். பாதங்கள் பூமியிலிருந்து சிறிது உயரத்தில் இருக்கும்.பலியாக்கப்படும் நபரை அடிக்கவும் அவமான படுத்தவும் பகைமையை தீர்த்து கொள்ளவும் தக்கதாக கைக்கு எட்டும் தொலைவில் சரீரம் தொங்கி கொண்டிருக்கும்.

சுற்றிலும் நடமாடிக் கொண்டிருக்கும் கூட்டம் கொடுமை படுத்தவும், அட்டுழியமாக நடத்தவும், எல்லாவித வன்கொடுமைகளை நடப்பிக்க தக்கதாக மணிக்கணக்கில் அவர் சிலுவையில் தொங்கவிடப்பட
ுவார். வருவோர் போவோரெல்லாம் முரட்டுத்தனமான இருதயத்தோடு உள்ளவர்களும் வன்கொடுமை புரிவதற்கு மாறாக,அந்த காட்சி அவர்கள் அழுது,இரத்த கண்ணிர் வடிக்கச் செய்திருக்க வேண்டும்...

சிலுவை மரணம் என்பது உண்மையில் எல்லாவித கொடுரமான வேதனைகளையும் கோரமான தோற்றத்தையும் உட்படுத்தும் மரண வலி..
மயக்கம், தசை பிடிப்பு, தாகம், பசி பட்டினி,துக்க கெடுதி,அடிப்பட்ட காயங்களால் உண்டாகும் காய்ச்சல் தசை இறுக்க நோய், வெளிப்படையான அவமானம், தொடர்ந்து நீண்ட நேர வாதையினால் ஏற்படும் வேதனை, எதிர் பார்த்த பயங்கரம், கண்மூடித்தனமான அடிகளால் உண்டான காயமும் அவமானமும்,-இதற்கு மேலும் தாங்கி கொள்ளவோ சகித்து கொள்ளவோ கூடாத அளவுக்கு உச்சக் கட்ட வன்கொடுமைகள், மயக்கமுற்ற நிலையில் மட்டுமே சற்று விடுதலை உணர்வு உபத்திரவப் படுத்தப் பட்ட நபருக்கு கிடைத்தது.இயல்புக்கு அப்பாற்பட்ட நிலையில் தொங்குவதால் ஒவ்வொரு அசைவும் கடுமையான வலியை ஏற்படுத்தும். கிழித்து ரணமாக்கப் பட்ட நரம்புகள்...

வீக்கம் உண்டாக்கி, தசைகள் அழுகிப் போகிற நிலையில் இருக்கும். இரத்த நாளங்களின் பாதிப்பால்-குறி
ப்பாக தலையும்,வயிறும் இரத்த கட்டிகளாய் உறைந்து போய் இருக்கும். இப்படி ஒவ்வொரு பரிதாபத்துக்குறிய நிகழ்வுகளும் பல வகையிலும் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து கொண்டிருக்கையில் அங்கே தாங்க முடியாத தாகம்..

கிருஸ்துவின் மரணம் இப்படி தான் இருந்தது...
இந்த வலிகளையல்லாம் கிருஸ்து தாங்கி கொண்டார்...எல்லாம் நமக்காக..

அவர் நம்முடைய பாவங்களுக்காகமரித்தார் என்பதை நிணைவில் வையுங்கள்..
சிலுவை உங்களுக்கும் எனக்கும் என்ன அர்த்ததை கொடுக்கிறது,?? முதலாவது நமது பாவங்கள் மண்ணிக்க பட வேண்டுமானால் சாத்தியமான ஒரே வழி இதுதான் என்பதை உணர வேண்டும்..
இரண்டாவதாக,கிருஸ்துவின் மாபெரும் அன்புக்கும் நம்முடைய பாவ தன்மைக்கும் முன்பாக பய பக்தியுடன் அது நம்மை நிற்க செய்யும். சிலுவையில் அறையப்படும் காட்சி தகுதியற்ற தன்மையினிமித்தம் நம்மை நடுங்க வைக்க வேண்டும்.மூண்றாவதாக சிலுவையில் அறையபட்ட காட்சி நம்மை முழுவதும் கிருஸ்துவுக்கு ஒப்புவிக்கச் செய்ய வேண்டும்..
யேசு கிருஸ்து தம்மையே நமக்காக கொடுத்தார்..

இப்பொழுது நம்மை அவருக்கு ஒப்புகொடுக்கும் படி கேட்கிறார்..
யேசு கிருஸ்துவின் இந்த சிலுவை மரணத்தின் வலி
பற்றியதான இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது உங்களின் கண்களில் கண்ணிர் கசிந்தால் செய்து சேர் செய்யுங்கள் ..
அப்படி கண்ணிர் வரவில்லை என்றால் நீ கிருஸ்தவனே கிடையாது

Comments