பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்
பிலதெல்பியா சபையைப் பற்றி வேதம் என்ன கூறுகிறது?
*இன்றைக்கு 6 வது சபையான பிலதெல்பிப்யா குறித்து தியானிக்கலாம்.⛪*
வெளிப்படுத்தல்: 3:7-11
(பிந்திய கால எழுப்புதல் அடையும் சபை)
'பிலதெல்பியா' - என்றால் 'சகோதர சிநேகம்' என்று பொருள்.
*பிலதெல்பியா பட்டணம்:*
இது சர்தையிலிருந்து 28 மைல் தென் கிழக்கிலிருந்தது. லீதியா, மீசியா, பிரீசியா, ஆகிய நாடுகளின் நுழைவாயிலாக இப்பட்டணம்இருந்தது. திபேரியுராயன் .ப்பட்டணத்தைச் சீரமைக்க பெரிதும் உதவினான். எனவே, கொஞ்சக் காலத்திற்கு இப் பட்டணத்திற்குராயனின் புதுப் பட்டணம் என்ற பெயர் இருந்தது. ஆனால், மீண்டும் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது. அடிக்கடி இங்குநிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாய் இருந்தது.
இன்றைக்கும் இப்பட்டணம் 'அலாஷேகிர்' என்ற பெயரில் இருக்கிறது. இதன் இன்றைய ஜனத்தொகை 10,000. இதில் இப்போது 12 சபைகள் இருக்கிறது. 'அலாஷேகிர்' - தேவனுடைய பட்டணம் என்று பொருள்.
* இச்சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:*
1. பரிசுத்தமுள்ளவர்
2. சத்தியமுள்ளவர்
3. தாவீதின் திறவுகோலை உடையவர்
4. ஒருவரும் பூட்டக் கூடாதபடி திறக்கிறவர்
5. ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவர்
கிறிஸ்து பரிசுத்தமுள்ள ராஜாவாக இச்சபைக்கு வெளிப்படுகிறார். தாவீதின் திறவுகோல் என்பது ராஜரீக அதிகாரத்தையும் புதியஎருசலேமைத் திறந்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் குறிக்கிறது.
ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவர், ஒருவரும் பூட்டக் கூடாதபடி திறக்கிறவர் என்பது அவருடைய சர்வ வல்லமையையும், சர்வ அதிகாரத்தையும் காட்டுகிறது. மனித சக்திகள் அவருடைய வல்லமையை மேற்கொள்ளாது என்பது பொருள். ஏதேன்தோட்டத்தின் வழியை ஒருவரும் நுழையக் கூடாதபடிக்கு அடைத்தார். புதிய ஏற்பாட்டில் தமது இரத்தத்தின் மூலமாக ஒருவரும்பூட்டக்கூடாதபடிக்கு தேவாலயத்தின் திரைச்சீலையை மேலிருந்து கீழாக கிழித்தார். மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் யாவரும் போகவழி செய்தார். சுவிசேஸத்திற்கு யூதரும், சனகரீம் சங்கமும் ரோம அரசாங்கமும் கதவைப் பூட்ட முயன்றனர். ஆனால், ஒரு மனிதசக்தியினாலும் அதை பூட்ட முடியவில்லை. சகோதர அன்புள்ள சபைக்கு கிறிஸ்து தம்மை இவ்விதம் வெளிப்படுத்துகிறார்.
*நற்குணங்கள்:*
1. நற்கிரியை
2. கொஞ்சம் பெலனிருந்தும் மறுதலியாமல் வசனத்தை கக்க கொள்ளுதல்
3. பொறுமையாய் வசனத்தைக் கைக் கொள்ளுதல்
!!!இச்சபைக்கு தீய குணங்கள் ஒன்றும் சொல்லப்படவில்லை. ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்தக் கொள்ளாதபடி உனக்குள்ளதைப்பற்றிக் கொண்டிரு என்று ஆலோசனை மட்டும் கூறப்பட்டுள்ளது.!!!
*ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தம்:*
1. திறந்த வாசலை உனக்கு முன் வைத்திருக்கிறேன்.
2. சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்கு முன்பாகப் பணியச் செய்வேன்.
3. சோதனைக் காலத்தில் உன்னைத் தப்புவிப்பேன்.
4. இதோ சீக்கிரமாய் வருகிறேன். 92ம் வரகையைப் பற்றிய வாக்கு)
5. ஜெயங்கொள்ளுகிறவனை தேவாலயத்தில் தூணாக்குவேன்.
6. அதிலிருந்து அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.
7. தேவனுடைய நாமத்தையும் பரம எருசலேமின் நாமத்தையும் என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்.
*சாத்தானின் கூட்டத்தார்: (3:9)*
இது கிறிஸ்துவை மறுதலித்த
யூதர்களைக் குறிக்கிறது.
தேவனுடைய ஜனமே யூதர். ஆனால், உண்மையான யூதர் மாமிசத்தின்படி ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவரும் அல்ல.
ஆபிரகாம் விசுவாசத்தின் அடிப்படையில் நீதிமான் ஆனான். எனவே, மெய்யாய் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுகிற ஒவ்வொருவரும், எந்த ஜாதியாய், கொத்திரமாய் இருந்தாலும் அவன்தான் மெய்யான யூதன். (ரோமர்: 2:28,29) கிறிஸ்தவை மறுதலித்தும், தங்களைதேவ ஜனமென்றும் தங்களைப் பெருமை பாராட்டிக் கொண்டவர்களுக்கு இந்த எச்சரிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
*ஆலயத்தின் தூண்:*
ஆலயமென்பது சபையையும், புதிய எருசலேமையும் குறிக்கிறது. தூண் என்பது விசுவாசிகள் சத்தியத்தில் உறுதியாய் நிலைத்துநிற்பதைக் காட்டுகிறது. (கலாத்தியர்: 2:9 ; 1தீமோத்தேயு: 3:16)
*தேவனுடைய நாமம், தேவனுடைய நகரத்தின் நாமம், கிறிஸ்தவின் புதிய நாமம்:*
தேவனுடைய நாமம் எழுதப்படல் என்பது அவன் தேவனுக்கு சொந்தமானவன் என்பதைக் காட்டுகிறது. புதிய எருசலேமில் வாசம்பண்ண பிரஜா உரிமை (குடியுரிமை) பெற்றவன் என்பதைக் காட்ட அவன் மேல் தேவனுடைய நகரத்தின் நாமம் எழுதப்படுகிறது.
கிறிஸ்துவின் புதிய நாமம் என்பது 2 ம் வருகையில் கிறிஸ்து மணவாளனாய் வரும்போது சபையாகிய மணவாட்டி, மணவாளனாகியகிறிஸ்துவோடு இணைக்கப்படுவதன் மூலமாக புதிய நாமத்தைப் பெறுகிறது.
*பிலதெல்பியா சபை:*
பரிசுத்தமான சபை - கொஞ்சம் பலனிருந்தும் பொறுமையாய் வேத வசனத்தை கைகொண்ட சபை
*இச்சபை இக்காலத்து மிஷினரி சபைக்கு ஒப்பாக பொருத்தமாக நமக்கு உணர்த்தும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது.*
: வெளிப்படுத்தின விசேஷம் 22:12
[12]இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் *பலன்* என்னோடேகூடவருகிறது.
ரோமர் 6:23
[23]பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய *கிருபைவரமோ* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டானநித்தியஜீவன்.
கிருபை வரம் ( Gift) Romans 6:23
பலன் (Reward) Rev 22:12
இரண்டையும் யாராவது விவரித்து சொல்வீர்களா? கற்றுக்கொள்ள ஏதுவாகும்.
[30/08 10:45 pm] Aa uma Sister VDM: பலன் என்பது(reward )அவருடைய வருகையில் பெறப்போகிற கனத்தை குறிக்கிறது , கிருபையின் வரம்(Gift) என்பது கிறிஸ்துவுக்காக வாழும் போது இங்கு பெற்றுக்கொள்ளும் கனத்தை(வெற்றி,சமாதானம் ,சுகம் ) குறிப்பிடுகிறது
[30/08 10:46 pm] Aa uma Sister VDM: Reward தான் அதை பெறுவதற்கான ஏதாவது task உண்டா? கிறிஸ்துவுக்காக வாழ வேண்டும்என்றால் எப்படி?
நிச்சயமாக task உண்டு. அவனவனுக்கு என்கிற போது( எ-கா) பரிசுத்தம்,உண்மை,சொல்லப்போனால் ஆவியின் கனி நிறைந்த வாழ்விற்கு பலன் உண்டு
: ரோமர் 2:7-11
[7] *சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்குநித்தியஜீவனை அளிப்பார்.*
[8]சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினைவரும்.
[9]முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும்உண்டாகும்.
[10] *முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.*
[11]தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
: வெளிப்படுத்தின விசேஷம் 3:8
[8] *உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்,* நீ என் நாமத்தை மறுதலியாமல், என்வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும்பூட்டமாட்டான்.
சில சபைகளில் எல்லா பெலனும் இருக்கலாம்... ஆள் பெலம், பண பலம், செல்வாக்கு பலம், ஆனால் அங்கே தேவ வார்த்தையைகைக்கொள்ள கொஞ்சம் பலம் கூட இருக்காது அவர்களிடத்தில்...
சில சபைகளை காணலாம்... பண பலம் இருக்காது, செல்வாக்கு பலம் இருக்காது, விஸ்தாரமான இடம் இருக்காது, பாதுகாப்பு பலம்இருக்காது, ஆனால் அவர்களிடத்தில் தேவ வார்த்தையை கைக்கொள்ளும் பெலன் இருக்கும்.
மாற்கு 14:8
[8] *இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்;* நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூசமுந்திக்கொண்டாள்.
*நம்மிடம் என்ன பலம் இல்லாவிட்டாலும் , விசுவாச பெலத்தையும், தேவ வார்த்தையை கைக்கொள்ளும் பெலத்தை மட்டும்விட்டுவிடவே கூடாது*
[30/08 10:46 pm] Aa uma Sister VDM: *பிலதெல்பியா என்பதற்கு சகோதரரின் அன்பு என்று பொருள் ஆகும்*
❤ எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:1-2
[1] *சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.*
[2]அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
❤ ரோமர் 14:15,21
[15] *போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல;* அவனை உன்போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
[21] *மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதேநன்மையாயிருக்கும்.*
❤ எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:11-12
[11]எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; *இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்;*
[12] *உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்;*
❤ எபேசியர் 5:2
[2] *கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில்அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.*
❤ கலாத்தியர் 6:1-2
[1] *சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடேஅப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்;* நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
[2]ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, *இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.*
திறந்த வாசல்* என்பது ஆண்டவரின் சுவிசேஷத்தை உலகத்திற்கு அறிவிக்க ஆண்டவர்கொடுத்த வாக்குத்தத்தம்.
இதேப்போல ஆண்டவர் பவுலுக்கு சொல்கிறார்.
அப்போஸ்தலர் 18:9-10
[9]இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;
[10] *நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப்பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.*
கர்த்தர் பச்சை சிக்னல் கைகாட்டினால், சிகப்பு சிக்னல் காட்டுபவன் யார்?
கர்த்தர் ஒருவன் இருதயத்தை திறக்க, அவன் மனதை குருடாக்குபவன் யார்?
அடைப்பதும், திறப்பதும் கர்த்தர் கையில் இருக்கிறது... அது கர்ப்பமாகவும் இருக்கலாம், கதவாகவும் இருக்கலாம், ஆசீர்வாதமாகவும்இருக்கலாம்...
அப்போஸ்தலர் 2:33
[33]அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள்இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
எபேசியர் 1:13
[13]நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, *வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால்* அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
*பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும்வரப்போகிற சோதனைகாலம்... Rev 3:10* - என்பது எதை குறிக்கிறது❓
இது உபத்திரவ காலத்தை குறிப்பிடுகிறதா? அல்லது வேறு ஏதாவது அர்த்தமா இங்கே ஆண்டவர் சொல்ல வருவது?
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...
1 தீமோத்தேயு 4:1
[1]ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடையமாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டுவிலகிப்போவார்கள்.
[30/08 10:47 pm] Aa uma Sister VDM: 28 அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.
மத்தேயு 25 :28
29 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான், இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும்எடுத்துக்கொள்ளப்படும்.
மத்தேயு 25 :29
11 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
வெளிப்படுத்தின விசேஷம் 3 :11
ரொம்ப சரியாக சொன்னீங்கய்யா நமக்குறியது நமக்குதான் என்று சும்மா தூங்கிக்கொண்டிருந்தால் நமக்குறியதை எடுத்து தேவன்இன்னொருவருக்கு கொடுத்துவிடுவார் 🙏🏻🙏🏻🙏🏻
Comments
Post a Comment