சர்தை இச்சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு
சர்தை
வெளிப்படுத்தல்: 3:1-6
(கி.பி.1517 - மறுமலர்ச்சிக் கால சபை)
'சர்தை' என்றால் மீதியாயிருப்பது, தப்பிக் கொள்வது, சந்தோஷத்தின் அதிபதி என்று பொருள்.
சர்தை பட்டணம்:
இது தியத்தீராவுக்கு தென் கிழக்கில் சுமார் 30 மைல் தூரத்திலுள்ளது.
இப்பட்டணத்தின் வழியாக 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் சென்றன. இது நல்ல
வியாபார ஸ்தலமாயிருந்தது. முற்காலத்தில் லிதியா ராஜ்யத்திற்கு இது தலைநகராக
இருந்தது. சுமார் கி.மு.20 ல் பயங்கர நில நடுக்கத்தால் இப்பட்டணம்
அழிந்தது. அந்நாட்களில் அரசாண்ட திபேரியுராயன் 5 வருட வரியை வசு+லியாமல்
இப்பட்டணத்தை, அப்பணத்தைக் கொண்டு கட்டினான். இப்போது சர்தை முற்றிலும்
அழிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. ஒருசில குடிசைகளே
இவ்விடத்திலிருக்கிறது. இப்போது இவ்விடத்தில் ஒரு கிறிஸ்தவர் கூட இல்லை.
1. இச்சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:
ஏழு ஆவிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் - கிறிஸ்து சபையின்
பாதுகாவலர் என்பதைக் குறிக்கிறது. சபை கிறிஸ்துவின் பரிபு+ரண ஆவியினால்
நிரப்பப்பட்டு அவருடைய கரத்தால் நடத்தப்பட வேண்டிய ஒன்று என்று
வெளிப்படுத்துகிறார்.
2. நற்குணம்:
அதிகமாய் ஒன்றும் சொல்லப்படவில்லை. "தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத
சிலர் சர்தை சபையிலும் உண்டு. அநேகர் விழுந்துபோன சமயத்திலும் சிலர் தங்களை
பரிசுத்தமாகக் காத்துக் கொண்டனர்.
3. தீய குணம்:
ஆவிக்குரிய வாழ்க்கையின் செத்த நிலை - பெரிய சபை கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட
விசுவாசிகள் என்றும் பெயர் பெற்றும், ஆவிக்குரிய நிலையில்உயிரற்றுக்
காணப்பட்டனர். திருப்தி அற்ற நிலைகள் காணப்பட்டன. தானியேல்: 5:25 - 28 ல்
சொல்லப்பட்டதுபோல.
4. எச்சரிப்பு:
"நீ விழித்துக் கொண்டு சாகிறதற்கு ஏதுவானவைகளை ஸ்திரப்படுத்து".
பிறரை ஸ்திரப்படுத்துமுன் தான் உயிர் மீட்சி அடைய வேண்டியது அவசியமாயிற்று.
தேவனிடத்தில் பெற்ற கிரியைகளை பயன்படுத்தி மனந் திரும்பாவிட்டால்
சீக்கிரத்தில் அழிவு வரும்.
இப்பட்டணம் அழிந்ததற்கு இதனுடைய அஜாக்கிரதையே காரணம். சர்தையின் அரசனாய்
இருந்த கிரீசஸ், பெர்சிய அரசனான கோரேசுடன் போரிட்டான். சர்தை பட்டணம்
செங்குத்தான மலையின்மேல் கட்டப்பட்டிருந்தது. எதிரிகள் அதை எளிதில் அடையக்
கூடாத நிலையிலிருந்தது. கோரேஸ் 14 நாட்கள் முற்றிக்கை போட்டும் அதைப்
பிடிக்கமுடியவில்லை. கோட்டைக்குள் செல்லும் வழியை கண்டுபிடிப்பவனுக்கு
பரிசளிக்கப்படும் என்று அறிவித்தான். சர்தையின் வீரன் ஒருவன் தவறி விழுந்த
தன் தலைச்சீராவை எடுக்க பாறைக்கு இடையில் இறங்குவதை பெர்சிய வீரன் ஒருவன்
கண்டான். பின்பு எதிரிகள் அப்பாறை வெடிப்பின் வழியாக கோட்டைக்குள் சென்று
பிடித்தனர். கி.மு. 549 ல் இது நடந்தது. கி.மு.218 லும் இதே போன்று
சர்தையின் விழிப்பற்ற தன்மையால் பெரிய அந்தியோக்கஸ் கைப்பற்றினான்.
ஜெயங் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தம்:
வெண் வஸ்திரம் - வெளிப்படுத்தல்: 19:8 - ன் படி இது நீதியின் வஸ்திரம். ஜீவ
புஸ்தகத்தில் இவன் பெயர் நிலைத்திருக்கும். அதாவது, நித்திய ஜீவனை
சுதந்தரித்துக் கொள்ளுவான். பிதாவுக்கும் தூதர்களுக்கும் முன்பாகவும்
அவனுடைய நாமத்தை கிறிஸ்து அறிக்கையிடுவார். இவ்வுலகத்தில் கிறிஸ்துவின்
நாமத்தை ததரியமாய் மற்றவர்களுக்கு அறிக்கையிடுகிறவர்கள் - இவர்களைப் பற்றி
கிறிஸ்துவும் ஒரு நாளில் அறிக்கையிடுவார்.
Comments
Post a Comment