இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்


Image may contain: sky, ocean and text


*இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்;*
ஏசா 49:16
லண்டன் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்றுகொண்டிருந்தன.
ஒரு கார் பல மணிநேரமாக பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.
அதன் உரிமையாளர் பலவழிகளில் அதை சரிசெய்ய முயன்றார். ஆனால், ஒரு சிறிய அளவிற்கு கூட பயன் தரவில்லை
அருகில்
உதவி செய்ய யாருமில்லை, ஒர்க் ஷாப் அருகே எதுவுமில்லை அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்பொழுது ஒருகார் அவர் அருகே வந்து நின்றது. அதிலிருந்து வயதான முதியவர் ஒருவர் இறங்கி வந்தார்.
அருகில் வந்து,
“என்ன பிரச்சினை?” என்று கேட்டார். ஏற்கனவே எரிச்சலோடிருந்த அவருக்கு முதியவர் அப்படி கேட்டது மேலும் எரிச்சலூட்டியது,
கோபத்துடன் அவரைப் பார்த்து, “நான் இந்த காரின் உரிமையாளர் மட்டுமல்ல, காரை பழுது பார்ப்பதில் நிபுணர், எனக்கே இது புரியவில்லை, நீர் வயதானவராகவும் இருக்கிறீர், உமக்கென்ன தெரியும்?” என்று கேட்டார்,
ஆனாலும் இந்த முதியவர் வற்புறுத்தியதால் வேண்டாவெறுப்பாக அவரிடம் கார் சாவியை கொடுத்தார், முதியவர் காரை முழுவதும் நோட்டமிட்டார்.
கார் இஞ்சினில் ஒரே ஒரு வயரை சரி செய்தார். இப்பொழுது காரை start செய்யுங்கள் என்றார்.
என்ன ஆச்சரியம்!
பல மணிநேரமாக பழுதடைந்து நின்றுகொண்டிருந்த அந்த கார் ஒரே நிமிடத்தில் சரியாகி விட்டது.
அந்த காரின் உரிமையாளருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
முதியவரின் கைகளை பற்றிக்கொண்டு, “ஐயா, என்னை மன்னித்து விடுங்கள் உங்களை தவறாக எண்ணிவிட்டேன்.
ஐயா நீங்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் புன்முறுவலுடன், “இந்த காரை தயாரிக்கும் Henry Ford நான் தான்” என்றார்.
கார் உரிமையாளருக்கு பேச்சே வரவில்லை.
Henry Ford காரில் ஏறிக்கொண்டே, “காரை உருவாக்கிய எனக்கு, அதில் ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்று தெரியாதா?” என்று கேட்டார்.
அன்பான சகோதர, சகோதரிகளே என்னைக் குறித்து அக்கறை கொள்ள யாருமேயில்லை, என் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக்கூட யாருமில்லை, என்று கண்ணீர் வடிக்கின்றீர்களா?
உங்களை பார்த்துதான் இயேசப்பா கூறுகின்றார், *உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்*
தேவபிள்ளைகளே,
ஒரு காரை உருவாக்கின ஒருவருக்கு அதன் பிரச்சினைகள் தெரியுமானால்,
இந்த அன்டசராசரங்களையே படைத்த நம் தேவனுக்கு, தாயின் கருவில் உருவாக்கும் முன்னே நம்மை தெரிந்துகொண்ட நம் தேவனுக்கு நம் பிரச்சினைகள் எம்மாத்திரம்?
எனவே கவலையை விடுங்கள், கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள்.
உங்களை தன் உள்ளங்கைகளில் வரைந்த தேவன் ஒரு போதும் உங்களை மறக்கமாட்டார்.
ஆமென் அல்லேலூயா ……

Comments