கிறிஸ்துவர்கள் தயவு செய்து படிக்கவும், பகிரவும்

மிகவும் அவசியமான பதிவு (கிறிஸ்துவர்கள் தயவு செய்து படிக்கவும், பகிரவும்)
இன்றைய கிறிஸ்தவம் சந்தித்து கொண்டிருக்கும் முக்கியமான ஒரு அபாயம் அல்லது பிரச்சினை என்னவென்றால் ஒரு சில சபை பிரிவுகளில் பெரும்பாலும் ஏதோ ஒரே 'தலைப்பை' பற்றிய உபதேசங்களும், போதனைகளும் மட்டுமே திரும்ப திரும்ப போதிக்கப்படுகிறது!(உதாரணத்துக்கு ; செழிப்பு, ஜெயமுள்ள வாழ்க்கை, பரிசுத்த ஆவியின் வரங்கள் ,கொடுத்தல் etc ) சபை எப்பொழுது கூடினாலும் மக்கள் ஒரே மாதிரியான ஆவிக்குரிய உணவையே உட்கொள்ள நேரிடுகிறது, என்ன...கொஞ்சம் Modify செய்யப்பட்டு பகிரப்படுகிறது! அவ்வளவு தான்.. அந்த உணவு கெட்ட உணவு அல்ல, நல்லது தான்! ஆனால் எப்பொழுதும் இனிப்பையே சாப்பிட்டு கொண்டிருந்தால் அது ஆரோக்கியத்துக்கு கெடுதல் தானே!
உணவு கட்டுப்பாட்டு மருத்துவர் அடிக்கடி சொல்லும் இந்த "சமசீர் உணவு" என்ற பதத்தை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். அதாவது நாம் சாப்பிடும் தட்டில் எல்லா ஊட்டச்சத்துக்களும் நிறைந்த , கலவையான உணவை சேர்த்து கொள்ள வேண்டும் என்பது தான் அது. சரீரத்துக்கென்று அப்படிப்பட்ட உணவை உட்கொள்ளுவதன் மூலம் நான் மிகவும் ஆரோய்க்கியமாக வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. அதே போல தான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அப்படிப்பட்ட எல்லா ஆவிக்குரிய தன்மைகளும், நன்மைகளும் நிறைந்த உணவு தேவைப்படுகிறது. அப்பொழுது தான் நம் ஆவிக்குரிய சரீரம் புது பெலன் அடைந்து, இந்த உலகத்தில் தேவனுக்காக வைராக்கியமாக வாழும் திறன் பெற முடியும்.
நல்ல மேய்ப்பனாம் இயேசு தன்னை பின்பற்றின மக்களிடம் எப்பொழுதும் எல்லாவற்றையும் குறித்து பேசினார் என்று பார்க்கிறோம்.
1. தேவனுடைய ராஜ்யத்தை குறித்து பேசினார்.
2. அன்பு, எதிராளி, சமாதானம், ஜெபம், நம்பிக்கை என்பவைகளை பற்றி பேசினார்.
3. நற்குணம் , நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற அடிப்படைகளை பற்றி பேசினார்.
4. பாவம், தீமை, நரகம், இந்த உலகம் இவைகளை குறித்து பேசினார்.
5. பரம தகப்பனை பற்றியும் , அவரோடு நமக்கு இருக்க வேண்டிய ஐக்கியத்தை குறித்து பேசினார்.
6.பரிசுத்த ஆவியை குறித்து பேசினார்.
7. அவரின் இரண்டாம் வருகையை குறித்து பேசினார்.
8. காலம் முடிந்து என்னவெல்லாம் நடக்கும் என்பதை குறித்து எச்சரித்து பேசினார்.
9. நித்தியத்தை குறித்து பேசினார்.
10. வாழ்க்கையின் நோக்கத்தை குறித்து பேசினார்.
இன்னும் இப்படி பல...
ஒரு நல்ல மேய்ப்பன் இப்படிப்பட்ட தரமான, சமசீர் ஆகாரத்தை எப்பொழுதும் கொடுத்து தன் மந்தையை கண்மணி போல காப்பார். அது அவரின் பெரிய பொறுப்பு. வேதத்தின்படி ஒரு மேய்ப்பர் என்னவெல்லாம் தன மந்தைக்கு செய்ய வேண்டும் என்று பார்த்தால்,
1. மந்தையை பசும்புல் உள்ள இடங்களில் நடத்தி செல்வது
2. நீரண்டைக்கு சேர்ப்பது
3. ஒவ்வொரு ஆட்டுக்கும் தனி தனியாக அக்கறை காட்டுவது
4. மந்தைக்கு முன்பாக சென்று , எல்லா தீய சக்திகளில் இருந்து மந்தையை காப்பது
5. ஆடுகளுக்கு காயம் கட்டுவது. எலும்பு முறிவை சரியாக்குவது, பலவீனமானவைகளை தேற்றுவது
6. தொலைந்து போன ஆடுகளை தேடி கண்டுபிடிப்பது
7. ஆடுகளின் ரோமங்களை அவ்வப்பொழுது நீக்கி சுத்தமாக பாதுகாப்பது
8. தவறான வழிகளில் போகும் ஆடுகளை அடையாளம் கண்டு அவைகளை கண்டிப்பது
ஒரு நல்ல மேய்ப்பன் தன ஆடுகளுக்காக மேலே உள்ள எல்லாவற்றையும் செய்வான்! தேவைப்பட்டால் அவர்களுக்காக தன் ஜீவனையும் தருவான்!
மந்தையின் பொறுப்பு என்னவென்றால் மேய்ப்பனின் பின்னால் தொடர்வது , அவன் சத்தத்துக்கு செவி கொடுப்பது. ஒருவேளை மேய்ப்பன் தவறான பாதையில் பயணிக்கும்போது அவனை தொடரும் ஒட்டுமொத்த மந்தையும் கூட தொடர்ந்து இருவருமே தவறான இடங்களை சேர நேரிடுகிறது.
உங்களை நீங்களே இந்த மிக முக்கியமான கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.
1. (மேய்ப்பனுக்கு) நான் என்னுடைய மந்தைக்கு ஆவிக்குரிய சமச்சீர் உணவை ஊட்டுகிறேனா?
2. (மந்தைக்கு) நான் ஆவிக்குரிய சமச்சீர் உணவை தவறாமல் பெற்றுக்கொள்ளும் மந்தையில் இருக்கிறேனா?
ஒருவேளை உங்கள் பதில் "இல்லை" என்று இருந்தால் அது மிகவும் ஆபத்து. உடனடியாக உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரோக்கியத்தை தற்பரிசோதனை செய்வது மிகவும் நல்லது. அதற்கேற்ப உங்கள் முடிவுகள் அமையும். அது நல்லதுக்கு தான்!
கர்த்தர் தாமே நம் வழிகளை காப்பாராக!
நன்றி!
(இந்த பதிவு , இந்த பதிவில் வரும் தவறுகளை தெரிந்தோ, தெரியாமலோ செய்கின்ற எல்லா சபை பிரிவுகளை சேர்ந்த விசுவாசிகளுக்கும் , அவர்களை நடத்தி செல்லும் மேய்ப்பர்களுக்கும் மட்டுமே! உங்கள் மனம் புண்பட எழுதப்பட்டது அல்ல, பண்படுவதற்காகவே எழுதப்பட்டது! நன்றி)

Comments