ஆகாரம்/போஜனம் பற்றி வேதம் கூறுவது என்ன
ஆகாரம்/போஜனம் பற்றி வேதம் கூறுவது என்ன →
1) போஜனபிரியன் தரித்திரன் ஆவான் - நீதி 23-21
2) போஜன பிரியனாயிருந்தால் தொண்டையில் கத்தியை வை - நீதி 23-2
3) மாம்ச பெருந்தீனிக் காரருடன் சேரக்கூடாது - நீதி 23-20
4) போஜனத்தினால் இருதயம் ஸ்திரப்படாது - எபி 13-9
5) போஜனத்தினால் நாம் தீட்டு (கறை) படக்கூடாது - தானி 1-8
6) போஜனத்தின் மேல் இச்சை இருக்க கூடாது - சங் 78-18
7) பெருந்திண்டியினால் இருதயம் பாரம் அடைய கூடாது - லூக் 21-34
8) போஜனம் சகோதரனுக்கு இடறல் உண்டாக்க கூடாது - 1 கொரி 8-13
9) போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டாது - 1 கொரி 8-8
10) போஜனபிரியரூக்கு தோழனாக இருப்பவன் தன் தகப்பனை அவமானப் படுத்துகிறான் - நீதி 28-7
11) உன் சத்துரு பசியாய் இருந்தால் அவனுக்கு புசிக்க ஆகாரம் கொடு - நீதி 25-21
12) ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்க தசம பாகம் கொடுக்க வேண்டும் - மல்கி 3-10
13) தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல - ரோ 14-17
14) சாப்பிடும் முன்னால் ஸ்தோத்திரம் செலுத்தி சாப்பிட வேண்டும் - ரோ 14-6
15) கர்த்தருக்கு என்று புசிக்க வேண்டும் -ரோ 14-6
16) புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாக நினைக்க கூடாது - ரோ 14-3
17) புசியாதிருக்கிறவன் புசிக்கிறவனை குற்றவாளியாக தீர்க்க கூடாது - ரோ 14-3
18) அனுதின ஆதாரத்தை தாரும் என்று ஜெபிக்க வேண்டும் - மத் 6-11
19) நமது ஆகாரத்தை ஏழைகள், அநாதைகள் உடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும் - யோபு 31-17
20) மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் - உபா 8-3
Comments
Post a Comment