சிலைகளை வணங்கும் பழக்கம் முதலில் எங்கே ஆரம்பித்தது? எப்போது?


சிலைகளை வணங்கும் பழக்கம் முதலில் எங்கே ஆரம்பித்தது? எப்போது?

[1] ஆதியாகமம் 31:30 லாபான் யாக்கோபிடம், "இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய்?" என்று கேட்டான். ஏனெனில் ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்திருந்தாள். இங்கேதான் சிலை அல்லது சொரூபத்தைக்குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.

[2] இனி இந்தப் பழக்கம் எங்கே ஆரம்பித்தது என்று தேடுவோம்:
சிலைகளை லாபான் வணங்கி வந்தான். இந்த லாபான், ரெபெக்காளின் 
சகோதரன் . இவர்களுக்கு தகப்பன் பெத்துவேல். (ரெபெக்காள்: ஈசாக்கின் மனைவி/ யாக்கோபின் தாய்)

ஆதியாகமம் 22:20-23 இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்; அவர்கள்: ஊத்ஸ், பூஸ், கேமுவேல், கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான்.

ஆதியாகமம் 11:31
ல் ஆபிரகாமின் சகோதரனாகிய நாகோரின் குடும்பம் "ஊர்(ur)" என்கிற கல்தேயரின் தேசத்துப்பட்டணத்திலே குடியிருந்தது. இது மெசெப்பத்தோமியாவிலே இருந்தது என்று ஆதியாகமம் 24:10ல் வாசிக்கிறோம்.


மெசெப்பத்தோமியா யூப்ரிடிஸ்-Euphrates (ஐப்பிராத்து) மற்றும் டிக்ரிஸ்-Tigris (இதெக்கெல் ஆதி 2:15) என்ற நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியாகும். இது தற்போதைய ஈராக் பகுதியாகும்.

எனவே மெசெப்பத்தோமியாவில்-தான் இந்தப் பழக்கம் ஆரம்பமானது.

[3] சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே இடங்களை நிம்ரோத் என்பவன் அரசாண்டான். (ஆதி 10:10). நிம்ரோத் என்பவன் காம் என்பவனுக்கு பேரன். காம் என்பவன் நோவாவின் மகன். இந்த பாபேல் என்னும் இடத்தில்தான் ஜனங்கள் ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். இதுவும் மெசெப்பத்தோமியா பகுதியைச் சேர்ந்ததாகும். தொல்பொருள் ஆராய்ச்சியில் "ஊர்" என்ற பகுதியில் இருந்த சிக்குராத் (ziggurat) கோவில்களில் சின் அல்லது நன்னார் என்றழைக்கப்படும் தெய்வங்களை வணங்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு கோவில் சுவரில் நிலா மற்றும் சிலை வழிபாட்டைச் செதுக்கியிருப்பதைக் காணலாம். கி.மு. 3000-2500 என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிம்ரோத் ஆட்சியில் இந்த சிலைவழிபாடு ஆரம்பமானது.

Comments