அழகுக் குறிப்புகள்

"அழகுக் குறிப்புகள்"
தவறாமல் தினந்தோறும் தயவு செய்து மூன்று முறை உபயோகியுங்கள்,
🌺தினமும் உங்கள் இருதயத்தை மனந்திரும்புதலினால் சுத்திகரித்துக் கொள்ளுங்கள்
🌺சுகமான குளியல்...வெறும் நீரில் அல்ல, தேவனின் வார்த்தையிலே..மூழ்கிக் குளித்திடுங்கள்.
🌺சுருக்கங்கள் வராமல் இருக்க, மன்னிப்பை உபயோகப்படுத்திப்பாருங்கள்.
🌺ஈரப்பதத்தை குறையாமல் தக்க வைத்துக் கொள்ள, ஜெபமே சிறந்த காரணி.
🌺அன்பெனும் இனிமையான வாசனை திரவியத்தை சற்று உங்கள் மேல் தெளித்துக் கொள்ளுங்கள்.
🌺இன்னமும் உங்கள் அழகை மெருகூட்ட, பொறுமையை சற்று அதிக அளவிலே சேர்த்துக் கொள்ளுங்கள்.
🌺கவலையும் கோபமுமே வியாதியின் அடித்தளங்கள் என்பதை எப்பொழுதும் நினைவிற்கொள்ளுங்கள்.
🌺வயதின் தாக்கத்தைக் குறைத்து, என்றும் இளமையாய் உங்களை மிளிர வைக்க, விசுவாசமே நல்மருந்து.
🌺உங்கள் முகம் மிகச் சிறந்த பொலிவுடன் விளங்கிட, எப்பொழுதும் ஓர் புன்ன்கையை அணிந்து கொள்ளுங்கள்.

Comments