நியாயப்பிரமாணம்
நியாயப்பிரமாணம்
நியாயப்பிரமாணம் என்பது நன்கு ஏற்பாடுசெய்யப்பட்ட சட்ட ஒழுங்குகள் மூலம் ஒரு சமுதாயத்தை ஆட்சிசெய்தலாகும் . வேதாகமத்தில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு சிறந்த நியாயப்பிரமாணங்கள் கர்த்தரினால் தனது பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டன. அவற்றின்நோக்கம்..
1. கர்த்தரைஆராதனை செய்வதற்கும்,
2.கர்த்தருடன் தொடர்பு கொள்வதற்கும்
3.,ஒருவரோடொருவர் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும்
மோசேயின் நியாயப்பிரமாணமானது மற்ற நாட்டு நியாயப்பிரமாணங்களை விட பல விதங்களில் வித்தியாசமானது.மேசேயின் நியாயப் பிரமாணம் முலாவதாக அதன்தோற்றத்திலேயே வித்தியாசமானது. அதாவது இறைவனால் கொடுக்கப்பட்டது. இந்த நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது, நீதியானது, சிறந்தது. இவைகள கர்த்தரால் சீனாய் மலையில்வைத்து இஸ்ரவேல் மக்களுக்காக் கொடுக் கப்பட்டவையாகும். இந்த நியாயப்பிரமாணங்கள் மக்களை ஒன்றிணைத்தது, அவர்கள் இறைவனால் ஆதரிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நியாயப்பிமாணங்கள் உலகமயமானது, இந்த நியாயப்பிரமாணமானது கர்த்தரின் அன்பின் வெளிப்பாடாகும். இந்த உடன்படிக்கையை கைக்கொள்பவர்கள் யாவரும் கர்த்தருடைய சொந்த ஜனமாவார்கள்.( யாத். 19:5-6)
இஸ்ரவேலில் செய்யப்படும் சகல குற்றங்களும் கர்த்தருக்கு விரோதமான வையாகும்.(1.சாமு. 12: 9-10) அவர் தனது பிள்ளைகள் தன்னையே நேசிக்கவும் சேவிக்கவும் வேண்டுமென்று விரும்புகிறார்.( ஆமோஸ் 5: 21-24) தன்னுடைய நியாய ப்பிரமாணங்களை மீறுபவர்களை அவர் நியாயாதிபதியாகவிருந்து தண்டித்து ஒழுங்குபடுத்துவார்.( யாத். 22: 21-24, உபாக. 10: 18, 19:17) அந்ததேசத்தார் அல்லது அந்த சமூகத்தாரே நியாயப்பிரமாணத்தை நடப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களாகும்.(உபா. 13: 6-10, 17:7, எண் 15: 32-36)
கர்த்தரின் நியாயப்பிரமாணமானது ஏனைய நாடுகளில் காணப்படும் நியாயப்பிரமாணங்களைப் போலல்லாது முற்றிலும் வித்தியாசமானது. இது மனித உயிர்கள் மிகவும் விலையேறப்பெற்றவை என்பதைவெளிக் காட்டுகின்றன , ஏனெனில் மனித உயிர்கள் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டவர்கள். வேதாகமத்தின் நியாயப்பிரமாணமானது மிகவும் நீதியும் இரக்கமும்கொண்டவையாகும். இவை மிருகத்தனமற்றவையும் கெடுதலற்றவையுமாகும். கர்த்தருடைய பார்வையில் சகலரும் சமமானவர்களே.
மேசேயின் நியாயப்பிரமாணத்தில் காணப்படும் “கண்ணுக்கு கண்” என்பது கொடுமையானதும் இரக்கமற்றதுமல்ல. ஆனால் நியாப்பிரமாணத்தில் காணப்படும் சமமான சட்டமாகும்.( யாத். 21:24). ஒவ்வொரு குற்றவாளியும் கூலி கொடுத்தேயாகவேண்டும்.( எண். 35:31). பாகால் வணக்கமுள்ள தேசங்களில் பணக்காரர் தங்கள் குற்றங்களுக்காக பணத்தை தண்டமாகக் கொடுத்து தப்பமுடியும். கர்தரின் நியாயப்பிரமாணமானது விதவைகள், தகப்பனற்ற பிள்ளைகள், அடிமைகள், அந்நியன் ஆகியோருக்கு இழைக்கப்படும் அநீதிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றது.( யாத்.21:2, 20-21: , 22:21-23)
லேவியராகமம் 17-26 ல் எந்விதமான சமயச்சடங்குகளுக்கான கர்த்தருடைய வழிகாட்டலும் இல்லாதபோதும் பல கல்விமான்கள் இதனை “ பரிசுத்த சட்டதொகுப்பு” எனக் கூறுகிறார்கள்”, ஆனால் இந்த அதிகாரங்கள் தேவாலயம் பற்றியதும்,பொது ஆராதனை பற்றியதுமானதும், சமயச்சடங்குகள், நன்நெறிகள் சார்ந்த குறிப்புகளையும் தன்னைப்போல் அயலவனை நேசிப்பதுப்றியுமே கொண்டுள்ளன. (லேவி. 19:18). இஸ்ரவேல் தேசத்தார் மற்ற தேசத்தாரை விட்டுப் பிரிந்திருக் வேண்டும் என்றும் கூறுகின்றது, அத்துடன் கர்த்தர் பரிசுத்தமானவராகையால் பல சட்டத் தொகுப்புக்கள் பாகால் வணக்கத்தைத் தடைசெய்கின்றது.(21:8)
உபாகமப்புத்தகம் சில வேளைகளில் உபாகமச் சட்டத் தொகுப்பு என அழைக்கப்படுகிறது. இதில் நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. என்பது அடங்கியுள்ளது.( உபாக. 6:5) பத்துக் கற்பனையின் இரண்டாம் பதிவுபோல் இது காணப்படுகிறது (உபா. 5)
வேதாகத்திலுள்ள சட்டத் தெகுப்புக்கள் மனிதர்களினால் இயற்றப்பட்ட சட்டத் தொகுப்புக்களிலும்பார்க்க மேலானது. கர்த்தர் மக்களிடம் என்னத்தை எதிர்பார்க்கிறார் என்பதையே வேதாகமச் சட்டங்கள் கூறுகின்றன. இவை கர்த்தருடைய தன்மைகளை வெளிக்காட்டும் நித்திய நன்நெறிக் கொள்கையில் தங்கியுள்ளது. ஆகவேதான் (பத்துக்கறபனை) வேதாகம நியாயப்பிரமாணம் என்பது நன்நெறிச் சட்டத்தின் சுருக்கமாகும். இது உலகிற்கான அடிப்படை நன்நெறிக் கொள்கையாகும்.
குடியியல் சட்டம் என்பது ஐந்து ஆகமங்களிலும் கூறப்பட்ட சட்டங்களை கொண்டுள்ளது. இவை குடியியல், சமுதாய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது. அன்றுதொடக்கம் இன்றுவரை சட்டங்களை வழங்குபவரும் ஆளுகைசெய்பவரும் கர்த்தரே, எல்லா சட்டங்களும் அடிப்படையில் சமயஒழுக்கம் சார்ந்தவைகளே.பழைய ஏற்பாட்டில் எட்டு வகையான குடியியல் சட்டங்கள் இருக்கின்றன.
1. தலைவரை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்.
2. இராணுவத்தை ஒழங்குபடுத்தும் சட்டங்கள்.
3. குற்றவாளிகளுக்கு மதிப்பழிக்கும் சட்டங்கள்.
4. சொத்துக்களுக்கு எதிராகச்செய்யும் குற்றங்களுடன் தொடர்புடைய சட்டங்கள்.
5. கருணைகாட்டும்செயல்களுடன் தொடர்புடைய சட்டங்கள்.
6. தனிப்பட்டதும் குடும்ப உரிமைகள் பற்றியதுமான சட்டங்கள்.
7. சொத்துக்களுக்கான உரிமைகள் பற்றிய சட்டங்கள்.
8. ஏனய சமூகப்பழக்கங்கள் ஒழுங்குபடுத்தல் சம்பந்தமான சட்டங்கள்.
1. தலைவரை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்.:- இஸ்ரவேல்மக்கள் தலைவர்கள் சுதந்திரமாகவும் குற்றமற்றும் தைரியமாகச் செயற்படுவதற்காக பல வித்தியாசமான சட்டங்கள் இவ்வகையான குடியியல் சட்டத்திற்றகாக வரையப்பட்டுள்ளன.
2. சட்டத்திற்கு விலக்கப்பட்டவை:- பல வகையான மக்கள் வாக்களிப்பதற்கோ அல்லது அலுவலகத்தில் சேவைசெய்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கர்த்தர் கட்டளையிட்டுள்ளார். அவர்களாவன
1. வலது குறைந்தோர்.
2. விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
3. வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது
4. மேவாப்பியர், அம்மோனியர் போன்று விலக்கப்பட்ட அந்நியர்.( உபா. 23:1-3) இவ் வகையான சட்டகளால் இஸ்ரவேலர்களை கர்த்தருக்குமுன்பாக பூரணமுள்ளவர்களும் சுத்தமுள்ளவர்களுமாக இருப்பதற்கு படிப்பிக்கின்றார்.
3. இராஜாக்களுக்கான சட்டங்கள்.:- அனேக வருடங்களுக்குமுன் இஸ்ரவேலர்களுக்கு ராஜா இருந்தார். இஸ்ரவேலருக்காக ராஜா நியமிக்கப்படுவதானால் , அவர் கர்த்தரால் கொடுக்கப்படும் சட்டங்கள் யாவற்றையும் கைக்கொள்ளல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர் உண்மையான இஸ்ரவேலனாக இருத்தல்வேண்டும் அத்துடன் அவர் கர்த்தரை மட்டும் நம்பவேண்டும். பல மனைவிகள் உடையவராக இருத்தல் கூடாத..( உபாக. 17: 14-20) நியாயாதிகளின் புத்தகத்தகம் தற்காலிக இராணுவ தலைவராக செயற்படுகின்றது. சிலசெயற்பாடுகள் தற்காலிக நியாயாதிபதியாகவும் செற்படுகின்றது. இஸ்ரவேல் ராஜாக்கள் இந்த நியாயாதிபதிகளைவிட வித்தியாசமானவர்கள்.
4. நியாயாதிபதிகளுக்கான சட்டங்கள்:- நியாயாதிபதிகளில் இரண்டு பிரிவினர் உள்ளனர். ஆசாரியர்களும் ஆசாரியர்கள்அல்லாதவர்களும் (மூப்பர்கள்). ஆசாரியர்கள் சமயசம்பந்தமான வழக்குகளை விசாரிப்பார்கள், மூப்பர்கள் குடியியல் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பார்கள்.(உபா. 17: 8-13, 2 நாளா. 19: 8, 11) நியாயாதிபதிகள் மூப்பர் என்றும் அழைக்கப்படுவர் இவர்கள் வீட்டுத் தலைவர்களால் தெரிவு செய்யப்படுவார்கள். (யாத். 18: 13-26)
5. நீதிமன்றம் சார்ந்த சட்டங்கள்.:- கர்த்தர் இஸ்ரவேலர்களை இவ்வகையான சட்ட ஒழுங்கு முறைக்கான ஒழுங்கு முறைகளை நியாயாதிபதிகளின் கட்டிடங்களில் ஒழுங்கு படுத்தல் வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டார்.( யாத். 18:21-22, உபா. 1:15). குறிந்த விடயங்களை குறிந்த நியாயாதிபதிகளின் சபை தீர்மானிக்கலாம்., அத்துடன் பாரிய விடயங்களை பெரிய சபை நியாயந்தீர்க்கலாம். (உபா. 16:18). நியாயாதிபதிகளின் சபைகளால் தீர்மானிக்க முடியாதவற்றை உயர்நிதிமன்றத்தில் பிரதான நியாயாதிபதி விசாரிப்பார்.( 2.நாளா. 19: 10-11). உயர்நீதிமன்றத்தில் கர்தரே நியாயாதிபதியாயிருப்பார்.( யாத்.22: 21-24, உபா. 10:18)
நியாயாதிபதிகள் பணக்காரர் மத்தியிலும், ஏழைகள் மத்தயிலும், விதவைகள்மத்தியிலும், அந்நியர் மத்தியிலும், ஏனய உதவியற்றோர் மத்தியிலும் பாரபட்சமின்றி நடத்தல்வேண்டும்.( 23: 6-9). அதேநேரம் சாட்சிகளை நன்றாகக்கேட்க வேண்டும், சான்றுகளை ஆராயவேண்டும், அத்துடன் கரத்தர் தன்னுடைய நியாயப்பிரமாணத்தில் வெளிப்படுத்திய பிரமாணங்களுக்கமைய தீர்மானங்களை மேற்கொள்ளல் வேண்டும்.
6. சாட்சிகளுக்கான சட்டங்கள்:- சாட்சிகள் கர்த்தரின் நாமத்தில் உண்மைகளைச் சொல்லவேண்டும்.(லேவி.19:16) அப்படி அவர்கள் உண்மை சொல்லத் தவறும்பட்சத்தில் கர்த்தராலே நியாயந்தீர்க்கப்படுவார்கள். அவர்களுடைய ஏமாற்றல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் இந்த வழக்கிற்குரிய சகல குற்றங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.( யாத். 23: 1-3, உபா. 19:15-19).பெரிய குற்றங்களுக்கான தீர்ப்புச் சொல்லுவதற்கு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் விசாரிக்கப்படல் வேண்டும்.( எண். 35:30). உண்மையில் ஒரு சாட்சியை மட்டும்வைத்துக்கொண்டு யாரையும் குற்றம்சுத்தி தீர்ப்பளிக்கமுடியாது. எழுத்து மூலமான சான்றுகள் அல்லது வேறுசாட்சிகள் சான்றுகளாக ஏற்றுக் கொள்ளமுடியும்.(உபா. 17:6, 19:18)
7. சட்டத்தைச் செயற்படுத்துவதற்கான சட்டங்கள்:- நீதிமன்றத்தீர்ப்புக்கு மறுப்புத் தெரிவித்தால் அவன் சாகக் கடவன்.( உபா. 17:12-13)பழைய இஸ்ரவேல்மக்கள் நியாயாதிபதிகளாகவும் தலைவர்களாகவுமிருந்தார்கள். .( உபா. 16:18) வழக்காமாக ஒரு வேலையைச் செய்துமுடிக்கும் நடவடிக்கைகள் அந்நாட்டு பிரஜைகளின்கைகளிலேயே விடப்பட்டிருந்த்து.(உபா. 13: 9-10, 15:11)
8. அடைக்கலப்பட்டணங்களுக்கான சட்டங்கள்: :- அடைக்கலப் பட்டணத்திற்குள் நுழைவதற்கான அனுமதி நியாயாதிபதிகளிடமேயுண்டு. தவறுதலாக மனித கொலைகள் செய்தவர்கள் இந்த நகரங்களுக்குள் பாதுகாப்பிற்காக ஓடித் தங்களைக் காத்துக் கொள்வார்கள். தேசத்தின் பிரதான ஆசாரியன் மரிக்கும்போது, இவ்வாறு அடைக்கலம்கோரியவர்கள் எந்தவித தண்டனையுமின்றி தங்கள் வீட்டிற்குப்போகமுடியும்.(யாத். 21:12-14) உபாகமம்.19: 1-13) இவ்வகையான நகரங்களுக்குச் செல்வதற்கான பாதைகளை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ளவேண்டியது இஸ்ரவேலினது பொறுப்பாகும், தப்பி ஓடுகிறவர்கள் பழிவாங்கத் தேடு கிறவர்களின் கையினின்று பாதுகாக்கப்படுவார்கள்..
9. தீர்க்க தரிசிகளுக்காக சட்டங்கள்:- விக்கிரக வணக்கங்களை நியாயப்பிரமாணம் கண்டிப்பாகத் தடைசெய்கிறது அத்துடன் விக்கிரக ஆராதனைக்கு வழிநடத்துபவர்கள் மரணத்திற்கு உட்படுத்தப் படுவார்கள்.ஒரு உண்மையான தீர்க்கதரிசியை அறிவது அவரினால் மேற்கொள்ளப்படும் அற்புதங்களினால் அல்ல ஆனால் கர்த்தருக்கு உண்மையாயிருப்பதும் அவருடைய வெளிப்படுத்தலுக்கு உண்மையா யிருப்பதுவுமேயாகும். (Deut 18:20 -22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறை வேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.) மற்றப்படி பார்க்கும்போது உண்மையான தீர்க்கதரிசிகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்படிந்தேயாகவேண்டும். அவர்கள் கீழ்படியாமல் போகும்பட்சத்தில் , கர்த்தர் அந்த மக்களைத்தண்டிபார்.
10. இராணுவத்தை நிர்வகிப்பதற்கான சட்டங்கள்.:- இராணுவத்தை நிர்வகித்தல் குடியியல் சட்டத்தின் இரண்டாவது வகையைச் சார்ந்ததாகும். பாலஸ்தீனர்கள் யாவரும் கர்த்தருக்குச் சொந்தமானவர்களாவர். எல்லைகளைப்பாதுகாப்பதற்காக தங்கள் எல்லைகளுக்குள் போர்செய்வதற்கான கட்டளைகள் கொடுக்கப் பட்டவர்க ளாகும். எல்லா 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( எண். 1: 21-43) 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விலக்களிப்பு உண்டு.(எண். 4:3,23) சிறிய யுத்தங்கள் நடைபெறும்போது திருவுளச்சீட்டுமூலம் வீர்ர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். (எண். 31: 3-6) இராஜாவுக்குப் பாதுகாப்பாக சிறிய தொகை இராணுவமே அமர்த்தப்படும். எதிரகளின் தாக்குதல்களின்போது பாதுகாப்பவராக கர்த்தரே அவர்களுக்காகச் செயற்பட்டார்.( உபாக. 23: 9-14)
11. சில பிரஜைகள் இராவத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாகும்.:- ஆசாரியர்களும் லேவியர்களும் ( எண்.1 48-49) புதிதாக்கட்டியவீட்டை பிரதிஸ்டை செய்யாமலிருப்பவர்களும், (உபா.20:5) வயல்நிலத்தில் அறுவடை செய்து முடிக்கா தவனும், திரட்சைத்தோட்டத்தில் அறுவடைசெய்து முடிக்காதவனும்(உபா.: 20:6)ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன். (Deut 20:7) யுத்த அழைப்பிற்கு ஒருவருடத்திற்குள் திருமாகிய எவனும்(உபா: 24:5)
12. எல்லா யுத்தங்களும் பரிசுத்த யுத்தமாகும்— அதாவது, கர்த்தரின் தலைமையில் நடக்கும் யுத்தங்களாகும். ஆகவேதான் தன்னுடைய இராணுவத்திற்காக கர்த்தரே முன்னின்று யுத்தம் செய்து பாதுகாப்பார்.( உபா. 20:1-4) அத்துடன் எதிரிகள்மீது இயற்கை அழிவுகளையும் உண்டாக்குவார்.(யோசுவா 10:11, 24:7) கர்த்தருடைய பாதுகாப்புத் தேவையாகவிருந்தால் நாம் பாவத்திலிருந்து விலகியிருக்க வேண்டும், கர்த்தருக்கு பிரதிஸ்டை செய்தவர்களாயிருத்தல் வேண்டும், அத்துடன் போர்முனையில் அவருடைய வழிநடத்தலைப் பின்பற்ற வேண்டும்.( உபா.23:9-14). கர்த்தரே பிரதான கட்டளையிடும் அதிகாரியாக விருக்கிறார், அத்துடன் வெற்றிபெற்றதற்கான சகல மகிமையும் அவருக்கே உரியதாகும்.( எண். 10:9-10)பாலஸ்தீனத்திற்குள் காணப்படும் இஸ்ரவேலர்களல்லாதவர்கள் யாவரும் கொலை செய்யப்படல் வேண்டும். அத்துடன் அவர்களின் உடமைகள் ,சொத்துக்கள் யாவும் கர்த்தருக்குக் கொடுக்கப்படல் வேண்டும்.( உபா. 20: 16-18, 2:34, 3:6). அதாவது, அவர்கள் தங்கள் எல்லைகளைப் பரிசுத்தம் பண்ணக்கடவர்கள், அத்துடன் கானானிய விக்கிரகங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளக்கடவர்கள். பாலஸ்தீனத்திற்கு வெளியே இஸ்ரவேலர்கள் யுத்தம் செய்யும் போது , யுத்ததாக்குதலுக்கு உட்படுத்தப்படும் நகரத்தை தாக்குவதற்கு முன்னாகா சமாதானத்திற்காக ஒப்புக் கொடுத்தல் வேண்டும். அவர்கள் சமதானத்தை ஏற்கமறுத்தால் நீ அவர்களோடு யுத்தம்செய்யலாம். யுத்தத்தில் நீவெற்றியடையும் பொது சகல பிரஜைகளும் சொத்துக்களும் சட்டப்படி அடிமைகளாக்கப்படுவார்கள்.( உபா. 20: 10-15நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.Deut 20:11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ் செய்யக்கடவர்கள்.(Deut 20:12 அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,Deut 20:13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,Deut 20:14 ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.(Deut 20:15 இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.)
13 குற்றவாளிகளுக்கு மதிப்பளிப்பதற்கான சட்டம்.:- விஷேசித்த சட்டவிரோத குற்றங்கள் குடியியல் சட்டத்தின் மூன்றாவது பிரில் அடங்குகின்றது. சட்டவிரோத குற்றம் என்றால் என்னவென்று கர்த்தர் நியாயப்பிரமாணத்தில் சிறப்பாக வகையறுத்துக் கூறுகின்றார். அவற்றுக்கு சரியான தண்டனைகள் என்னவென்றும் கூறப்பட்டுள்ளன. குற்றங்கள்சகலதும் பாவமாகும். குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகளும் மாறுபடும்.இஸ்ரவேலர்கள் குற்றவாளி களுக்கு அதிகபட்சதண்டனை கொடுப்பதை கர்த்தர் தடைசெய்கிறார்.(உபா. 25:1-3) (Deut 25:1 மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.
(Deut 25:2 குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.(Deut 25:3 அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்.
கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள்.:-கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி, வாழ்நாள்முழுவதும் கடவுள்பயமுள்ள வாழ்வாகவே இருத்தல் வேண்டும், ஆனால் சில குற்றங்கள் கர்த்தருடைய ஆராதகைமுறமைக்கு விரோதமாக்க் காணப்படுகின்றன்)
கீழே கானப்படும்செயற்பாடுகள் கர்த்தருக்கு விரோதமானவைகளாகும்
- கர்த்தரைத்தவிர வேறு தேவர்களை ஆராதித்தல். (யாத். 22:20, 34:14), (உபாக. 13: 1-8)
- மாயவித்தை அல்லது பில்லி சூத்திரங்கள் மூலம் மக்களை கர்த்தரைவிட்டு பின்வாங்கச் செய்தல். ( யாத் 22: 18, உபா. 18: 9-14)
- தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
- மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.
- இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.
- அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன். ((Lev. 18:21; 20:2–5);
- கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன்கொலைசெய்யப்படவேண்டும். ((Lev 24:16 )
- உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (Deut 18:18
- என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். . (Deut 18:19
- சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். (Deut 18:20
- நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன். (Exod 35:2
- ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் . (Exod 35:3 [தமிழ்])
சமூகத்திற்கு எதிரான குற்றங்கள்– சில குற்றச்ச்செயல்கள் சமூகத்தை முழுவதுமாகப் பாதிக்கின்றது. இலஞ்சம் வாங்குவதன்மூலம் நீதியைப்புரட்டாதிருப்பாயாக. (யாத். 23: 1-7, உபாகம்ம் 19:16-21) நீதிபதிகள் யாவரையும் சமனாக நடத்தவேண்டும் என்றுகட்டளையிடப்பட்டுள்ளார்கள்.
உடலுறவு நன்னடத்தைக்கு எதிரான குற்றங்கள்:- வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள நியாயப் பிரமாணமானது உடலுறவு நன்னடத்தையைப் பாதுகாத்து குடும்ப வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்துகிறது. இருவர் உடலுறவில் இணைவதன்மூலம் ஒரே மாமிசமாகிறார்கள்,
1. மணமாகாமல் ஆண் பெண்கலவி:- இஸ்றவேலில் ஆண்பெண் உடலுறவில் இணைதல் மிகவும் பரிசுத்தமானது. புதிதாக திருமணம் செய்தபெண் தனது கணவனைத் தவிர்ந்த வேறு ஆணுடன் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டால், அது நிரூபிக்கப்பட்டால் அவள் சாகடிக்கபடல் வேண்டும். அந்தக்குற்றச் சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால், அவளுடைய கணவன் பெரும் தொகைப் பணத்தை குற்றமாக்க் கட்டி, அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ( உபா. 22:13-21)
2. விபச்சாரம்:- கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி விபச்சாரம் பயங்கரமான குற்றமாகும், சிலவேளைகளில் இந்தக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யப்படவேண்டும். (லேவி. 20: 10-12, உபாக. 22:22) திருமணம் நிச்சயிக்கப்பட்ட கன்னிப்பெண் நியாயப்பிரமாணத்தினால் பாதுகாக்கபடுகின்றாள். நிச்சயிக்கப் படாதவேறு மனிதருடன் உடலுறவில் ஈடுபட்டால் இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள். (உபா. 22: 23-24)
3. ஓரினச் சேர்க்கை :- மிருகத்துடன் புணருதல், அல்லது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுதல் கடுமையாகத் தடைசெய்யப்படுகின்றது. இது கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி மரணத்திற்கேதுவானது. (லேவி: 20:13)
4. வேசித்தனம்.:-வேசித்தனத்தில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் கொலை செய்யப்படக்கடவர்கள்.( ஆதி 38: 24, லேவி. 19: 29, 21:9)
5. தடைவிதிக்கப்பட்ட உறவினருக்கிடையில் ஏற்படும் தகாத கலவி:-ஒருவரின் கிட்டிய உறவினருடன் உடலுறவில் இணைதல் மரணத்திற்கேதுவானது. (லேவி. 20: 11-14)
6. மிருகப்புணர்ச்சி:- மிருகங்களுடன் புணருதல் மரணதண்டனைக்குரியது. (யாத். 22: 19,லேவி 18: 23, உபா. 27: 21)
7. உடைமாறி அணிதல்:- பால்களுக்கிடையிலான வித்தியாசம் அவர்கள் அணியும் உடையினால் அடையாளம்காட்டப்படும். இருந்தும் எதிர்பால் உடைகளை அணிதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
8. தனிப்பட்ட மனிதருக்கு எதிரான குற்றம்:- மற்றவர்களுக்கு எதிரான சட்டவிரோதசெயல்கள் பயங்கரமான குற்றச்செயலாக்க் கருதப்படும். கிழ்காணப்படும் குற்றங்கள் உதாரணமாக்க் காட்ப்படுகின்றன
- கொலைசெய்தல்:- மனித உயிரை திட்டமிட்டுக் கொலைசெய்தல் கொலைத் தண்டனைக்குரிய குற்றமாகும். எதிர்பாராது கொலை செய்தல், யுத்த்த்தில் கொலை செய்தல், சட்டப்படி கொலைத் தண்டனையை நிறைவேற்றல் என்பன சட்டவிரோத மனித கொலையாக்க் கருதப்படமாட்டா.( யாத். 21: 12-14, எண். 35: 14-34). ஆறாவது கட்டளை “ கொலை செய்யாதிருப்பாயாக” என்பதாகும். இயேசு இதனை மேலும் சிறப்பாக விளக்கி தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளாதே என்றும், வீணனென்றும் , மூடனே என்றும் சொல்லவேண்டா ம் எனக் கூறியுள்ளார். ( மத் 5: 21-22)
- தாக்குதல் செய்தல்:- ஒருவரோடொருவர் சமாதானமாக வாழும்படி கர்த்தரின் நியாயப்பிரமாணம் கூறுகின்றது. ஆனால் அவ்வாறான குற்றங்கள் ஏற்படுகின்றன, தாக்குதல் சம்பந்தமான சட்டங்களை கர்த்தர் ஏற்படுத்தியுள்ளார். ஒருவரைக் காயப்படுத்தி அவரது நேரத்தை வீணடித்தால், காயப்படுத்தியவர் அதற்குரிய பணத்தை கட்டவேண்டும். அவ்வாற வழக்குகளில் நீதிமன்றம் அதற்குரிய குற்றப் பணத்தைத் தீர்மானிக்கும். ( யாத்.21: 18-19)
காயப்பட்டவர் அடிமையாயிருந்தால், அவனுக்கு அங்கக் குறைபாடு ஏற்பட்டால்,. குற்றம்புரிந்தவருக்கு பெரும் பணச் செலவு ஏற்புடும. அல்லது அந்த அடிமை இறந்தால், அக்குற்றத்தைப் புரிந்தவரும் சாகவேண்டும். அந்த அடிமை பிழைத்திருந்து அங்கக் குறைவு ஏற்படாமலிருந்தால், அக்குற்றம் புரிந்தவருக்கு தண்டனையில்லை.( யாத். 21: 20-21, 26-27)
மகளோ அல்லது மகனோ பெற்றோரை தாக்கித்துன்ப்பபடுத்தினால் தாக்கியவர் கொலை செய்யப்படக்கடவர். ( யாத் 21: 15) புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம். (உபா. 25:11–12).
உரியகாலத்திற்குமுன் பிள்ளை பெறுதல்:- ஒரு சண்டையின் போது ஒருபெண் உரியகாலத்திற்குமுன் பிள்ளை பெறுவதோ அல்லது மரணம் ஏற்பட்டாலோ, அந்தப்பெண்ணை அடித்தவர் மரணத்திற்குள்ளாக்கப்படுவார். இந்த சண்டையின் காரணமாக குறைப்பிரவசம் ஏற்படுமாயின் அற்காக குற்ப்பணத்தை நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரம் கட்டல்வேண்டும்.
பலவந்தமாய் கற்பழித்தல் :- திருமணஉறுதிசெய்யப்பட்ட பெண்ணைக் பலவந்தமாய் கற்பழிக்கும் ஒரு நபர் சாகடிக்கப்படக்கடவன். ( உபா. 22: 25—27). ஒருவருக்கும் நியமிக்கப்படாத பெண்ணைக் பலவந்தம் பண்ணிக் கற்பழித்தால் அவன் அதிக பணம்செலவுசெய்யவேண்டும் அத்துடன் திருமண ஏற்பாடும் செய்தல் வேண்டும். தகப்பன் திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்துப் பணத்தைத் தான்வைத்துக் கொள்ள முடியும். அவர் சம்மதம் தெரிவிப்பாராகில் பலவந்தம்பண்ணினவர் திருமணம்செய்யமுடியும், ஆனால் விவாகரத்துக் கோரமுடியாது.( யாத். 22: 16-17, உபா.22.: 28—29). கற்பழிக்கப்பட்ட பெண் நியமிக்கப்பட்ட அடிமையாயிருந்தால், அவளைச் சேர்த்து வைக்கக் கூடாது. அதேநேரம் கற்பழித்தவர் மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கப்படமாட்டார். ஆனல் கர்த்தருக்கு முன்பாகசெய்த பாவத்திற்காக குற்றநிவாரணபலி செலுத்தல் வேண்டும்.
கொடுமைப்படுத்தல்.:-தங்கள்உரிமைகளைச் செயற்படுத்த முடியாமலிருப் பவர்களைக் கர்த்தர் பாதுகாக்கின்றார். பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டவேண்டாம். குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் . உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக .யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம். செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக(Ex. 22:21–24; Lev. 19:14, 33; Deut. 24:14; 27:18–19).
பலவந்தமாய்க்கடத்திச் செல்லல்.:- ஒரு மனிதனைக் கடத்திச்சென்று விற்பனைசெய்தல் அல்லது அவனை அடிமையாகப்பாவிப்பது கடும் குற்றமாகும்.( உபா. 24:7) இந்தத் தடை அந்நியருக்கும் பொருந்தும்.( யாத். 22: 21-24) குருடருக்கும் செவிடருக்கும் பொருத்தமாகும். (லேவி. 19:14) சகல ஜனங்களுக்கும் பொருத்தமானது. ( உபா. 27: 18-19, )
சொத்துக்களுக்கு எதிராகச்செய்யப்படும் குற்றச் செயல்கள்:- வேதாகமச் சட்டமானது மற்றய நாட்டுச் சட்டங்களைப் போன்றதல்ல, சொத்துக்களைவிட மனித உயிர்கள் பெறுமதிமிக்கவை என கருதுகின்றது. ஆனால் சொத்துக்களை வைத்திருப்பதற்கும் அவற்றை களவு,மோசடி என்பவற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் அனுமதிக்கின்றது. கீழே கூறப்படும் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளன.
அச்சுறித்திப்பணம்பறித்தலும் கடன்மோசடி செய்தலும்.:- இவ்வாறான குற்றங்களை கர்த்தரின் நியாயப்பிரமாணத்தில் களவகவே கருதப்படுகின்றது. இவற்றிற்கு அதிகபட்ச தண்டனை குற்றமாகக் கொடுக்கப்படுகின்றது. (Ex. 22:1–3; Lev. 6:1–7).
நிறையிலும் படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.:-ஆதிகால இஸ்றவேலர்கள் பணத்திற்கு வியாபாரம் செய்யவில்லை, மாறாக கொடுக்கல்வாங்கல்கள் விலைஉயர்ந்த உலோகங்கள் நிறுத்துக் கொடுக்கப்பட்டன. தவறான அளவுகளைப்பாவித்து ஏமாற்றுவதைக் கர்த்தர் தடைசெய்கின்றார், அதனைக்களவாகவே கருதி அதற்குத் தண்டனை கொடுக்கப்படுகின்றது. (Deut. 25:13–16, Lev. 19:35–36).
தொலைந்த மிருகங்கள்.- பழைய இஸ்ரவேலர்களின் நாட்களில் “ கண்டுபிடிப்போர், பாதுகாப்போர்” அலைந்துதிரந்து காணாமல்போகும் மிருகங்கள் உரிமையாளர்களிடம் திரும்பவும் ஒப்படைத்தல் வேண்டும். உன்னுடைய எதிராளியின் எருது அல்லது கழுதை தொலைந்து போனதை நீ கண்டால் அவற்றை மீண்டும் அவனிடம் கொண்டுவந்துசேர்க்க வேண்டும்.. ,” (Ex. 23:4–5; Deut. 22:1–4).
எல்லைகள்:- நலங்கள் அதன் அளவுகளுக்கேற்ப எல்லைக்குறியிடப்பட்டு அடையாளப்படுத்தப்படும். இந்த எல்லைக்குறிகளை அகற்றுதல் அல்லது மாற்றுதல் கர்த்தரின் சாபத்திற்கேதுவானது. இது அயலவனிடம் களவுசெய்தலுக்கு ஒப்பானது அத்துடன் பெரிய நிலச் சொந்தக்கார்ராகிய கர்த்தருக்கு விரோதமான குற்றச் செயலாகும். (Deut. 19:14; 27:17).
கருணை நடக்கைகள் சார்பான நியாயப்பிரமாணங்கள்.:- கர்த்தருடைய நியாயப்பிரமாணமானது பாதுகாப்பற்ற மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பாதுகாப்பளிக்கின்றது.
மிருகங்களின் பாதுகாப்பு:- இவ்வகையான சட்டங்கள் சூழலுக்குரிய சட்டங்களாகும். உதாரணமாக, 7ம் வருடத்தில் இஸ்ரவேலர்கள் நிலத்தைப் பயிரிட வேண்டாம் என்று கட்டளையிடப்பட்டுள்ளார்கள். எதாவது கனிமரமோ அல்லது தானி யங்களோ வளர்ந்திருந்தால் அவற்றை வறுமைப்பட்டவர்களுக்காகவும், மிருகங் களுக்காகவும் விடப்படல்வேண்டும்.இவ்வகையான செயற்பாடுகள் சுழற்சிப் பயிர்செய்கையை ஊக்குலிக்கின்றது.(Ex. 23:11–12; Lev. 25:5–7). வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது. தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும். உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக. (Deut. 25:4).மிருகங்கள்மீது அதிகபாரம் சுமத்த க்கூடாது அத்துடன் அவற்றை அடித்துத் துன்புறுத்தக்கூடாது. அவைகளும் சபாத் நாளில் ஓய்வெடுக்கவேண்டும். (Ex. 20:8–11; 23:12; Deut. 22:1–4).
மனிதவர்க்கத்திற்கான பாதுகாப்பு:- விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; (Ex. 22:21–25).அவர்களின் சுய கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக தொழில் வாய்ப்புக்கள் செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்குரிய சம்பளம் சரியாக்க் கொடுக்க வேண்டும்.( (Deut. 24:14–15, 19–22).
உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.(Lev. 25:35–37). வயதானவர்கள் கனம்பண்ணப்படல் வேண்டும். (Lev. 19:32). பிரயாணத்திலிருப்பவர்கள் தோட்டத்திற்குள் சென்று தாங்கள் சாப்பிடக்கூடியவற்றை எடுத்துக் கொள்ளலாம் மேலதிகமாக எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. (Deut. 23:24–25).
தனியாளுக்குரியதும் குடும்பத்துக்குரியதுமான சட்டங்கள்:- குடியியல் சட்டத்தில் இதுமிகவும் பரந்த அளவைக் கொண்டுள்ளது. கீழ்குறிப்பிடப்படும் விடயங்கள் இவற்றில் அடங்கும்.
பெற்றோரும் பிள்ளைகளும்:-பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உடுத்தி உணவூட்டிப் பராமரித்தல் வேண்டும்.தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்தில் திறம்பட வளர்த்தல் வேண்டும். (Deut. 6:6–7).
தகப்பனுக்குரியகடமைகள்—- பிள்ளைகளை விருத்தசேதனம் செய்தல், (Gen. 12–13) முதற்பேறானவைகளை கர்த்தரிடமிருந்து மீட்டுக் கொள்ளல்(எண். 18: 15-16) பிள்ளைகளுக்கு நல்ல திருமணம் செய்து கொடுத்தல் ( ஆதி 24: 4) பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியும்படி கட்டளையிடப் பட்டுள்ளார்கள்.( யாத். 20:12). பெற்றோரை அடித்தல், சபித்தல், என்ப மரணதண்டனைக்குரிய குற்றமாகும். (மதுபானம் அருந்துதல், பிடிவாதம் செய்தல்,) (Ex. 21:15, 17; Deut. 21:18–21). சிறுபிள்ளைகள் பெற்றோரின் பராமரிப்பிலிருக்கின்றபடியால் அவர்கள் எந்தப் பொருத்தனையும் செய்யமுடியாது.. திருமணம் செய்யாத பெண்பிள்ளைகளும் தகப்பனாரின் சம்மதமின்றி பொருத்தனைகளை செய்யமுடியாது. ( எண். 30: 3-5)
திருமணம்:–தன்னுடைய மிகநெருங்கின உறவினரையும், குடும்ப அங்கத்தவர்களையும் திருமணம் செய்வதை இஸ்ரவேலருக்குள் கர்த்தர் தடைசெய்துள்ளார். (Lev. 18:6–18; Deut. 27:20–23). கானானியருக்குள் கலப்புத் திருமணம் செய்தலாகாது ஏனெனில் அவர்கள் பாகால்வணக்கத்திற்கு வழிநடத்துவார்கள். (Deut. 7:1–4). ஆனால் அவர்கள் கானானியர்கள் மனம்மாறி இஸ்ரவேலராக வந்தால் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. யுத்தகாவலிலுள்ள பெண்ணை, அவளுடைய பெற்றோர் இறந்திருந்தால் அவர்களுக்கா ஒரு மாதம் துக்கம் கொண்டாடியபிற்பாடு திருமணம் செய்யமுடியும்.அவளுடைய கணவன் இறந்திருந்தால் அவள் சுயாதீனமானவள். அவளுடைய திருமணம் அவளை சட்டப்படி இஸ்ரவேலராக ஏற்றுக்கொள்ளும்.
ஆசாரியர்களின் திருமணத்திற்காக ஒரு விஷேடசட்டம் உண்டு. அவன் கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். (Lev. 21:7, 13–15).
திருமணபந்நத்தில் ,பெண்கள் சீதனம்செலுத்துவதில் சட்டத்தின்மூலம் பாதுகாக் கப்படுகின்றார்கள். கணவன் இறந்தால் அல்லது விவாகரத்துச் செய்தால் மனைவிக் குப்பெரும் தொகைப்பணம்கொடுக்கப்படல் வேண்டும்.பெரும் குற்றம் செய்பவர்கள் பெரும் தொகைப் பணத்தை குற்றத் தொகையாகக் கட்டவேண்டும். மனைவியைத் தன்னுடைய சொந்த மாமிசமாக நடத்தவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். (Deut. 21:10–14).
தகப்பனையும் தாயையும் பிள்ளைகள் கனம்பண்ண வேண்டும். (Ex. 20:12)பெண்களின் மாதவிடாய்காலத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு மனைவி பிள்ளைப்பெறும் வயதில், பிள்ளைகள் இல்லாமல் கணவன் மரித்துவிட்டால், அவனுடைய கிட்டத்து உறவினர் அவளைத்திருமணம் செய்து, பிள்ளைகள்பெற்று குடும்ப அந்தஸ்தைக் காப்பாற்றுவனாக. (Deut. 25:5–10).இவ்வகை யான நடவடிக்கைள் குடியியல் சட்டத்தின்படி ஏற்பாடுசெய்யப்படல் வேண்டும்.
குடும்பத்தில் கணவனுக்கே முதன்மை அதிகாரம் கொடுத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் மனைவியானவள் கணவனுக்கு கீழ்பட்டவளாக இருத்தல் வேண்டும். இது கணவனுக்கு கீழானவள் என்றோ அல்லது அடிமையானவள் என்றோ பொருள்படாது, ஆனால் அவர்கள் இருவரும் ஒருமாமிசமானவர்கள்.
வாடகை அடிமை:- பணக்கார்ரின் சூழ்ச்சிகளின் பிடியிலிருந்து கர்த்தர் ஏழைகளைப் பாதுகாக் கின்றார். பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்கார னுடைய கூலி விடியற் காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. (Lev. 19:13; Deut. 24:14).
அடிமைகள்:-அடிமைகள் இரண்டுவகைப்படும், சட்டப்படியான அடிமை, நிரந்தர அடிமை. கடன்கொடுக்கமுடியாமல் இருக்கும் இஸ்ரவேலர்கள் சட்டப்படியான அடிமையாவார்கள், அல்லது தற்கால அடிமையாகவிருக்கலாம். அடிமைக்காலம் ஆறுவருடங்களுக்கு நீடிக்கும் அல்லது
சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள்:- குடியியல் சட்டத்தில் அடங்கியுள்ள அடுத்தபெரிய சட்டமே சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமாகும். கீழே காட்டப்படுபவை இந்தச் சட்டங்களில் அடங்கும்.
தொலைந்துபோன சொத்துக்கள்:-மோசேயின் நியாயப்பிரமாணங்களின் கீழ் எல்லா தொலைந்துபோன சொத்த்துக்களும் அதன் உரிமையாளர் யார் என்று கணடுபிடிக்கப் பட்சத்தில் அல்லது அவரால் உரிமைகோரும் பட்சத்தில் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுக் கப்படல் வேண்டும். (Deut. 22:1–4).
பாதுகாப்பற்ற சொத்துக்கள்:- பாதுகாப்பற்றசொத்துக்களுக்கு(மிருகம்) அதன் உரிமையாளரே பொறுப்பாளியாவார். ஒருவரின் சொத்தினால் வேறுநபர் பாதிக்கப்படுவாராகில் அதன் உரிமையாளரே குற்றம் கட்டவேண்டும். மரணம் ஏற்பட்டால் அந்த உரிமையாளரின் சொத்தும்(மிருகம்) சாகடிக்கப்படல் வேண்டும். (Ex. 21:28–36; Deut. 22:8).
நிலத்தின் உரிமையாளர்:-உண்மையில் கர்த்தரே நிலத்தின் உரிமையாளராவார். (Lev. 25:23). தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவர்கள் அதனை ஏழாவது வருஷத்தில் பயிர்செய்யாமல் இளைப்பாறவிடும்படிவேண்டிக் கொள்கிறார். (Lev. 25:1–7).ஏழாம்வருடத்தில் பயன்தரும் நிலங்களின் அறுவடையை அறுக்காமல் வழிப்போக்கர்களுக்கும் வறியவர்களும் சாப்பிடும்படி விடப்படுதல்வேண்டும். சில குறிப்பிட்ட நிலங்களை குறிப்பிட்ட குடும்பங்கள் பயிர்செய்து பிழைக்கும்படி விடப்படல் வேண்டும். 50தாவது வருடத்தில் அதன் உரிமையாளர்களிடம் அந்த நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படல் வேண்டும். (Lev. 25:8–24)
சுதந்தரித்துக் கொள்வதற்கான சட்டங்கள்:-சாதாரணமாக சட்ரீதியான பிள்ளைகளுக்கு குடும்பச் சொத்துக்களைச் சுதந்தரிக்கும் உரிமையுண்டு. மூத்தமகனுக்கு மற்றப் பிள்ளைகளைவிட இரண்டுபங்கு சுதந்திரம் உண்டு. (Deut. 21:15–17; 25:6). மூத்தமகன் தனது வயதுசென்ற பெற்றோரைப்பராமரித்து அவர்கள் மரிக்கும் வேளையில் அவர்களை அடக்கம்செய்வதும் அவரது கடமை.யாகும். துஷ்டமகனுக்கு அதில் பங்குகிடையாது. ஆண்பிள்ளைகள் இல்லாதவிடத்துபெண்பிள்ளைகளுக்கு அந்தச் சொத்துக்கள் செல்லும்.அந்தப் பெண்பிள்ளை தங்கள்சொந்தத்திற்குள்ளேயே திரமணம் செய்தல்வேண்டும்
நன்றி
Comments
Post a Comment