தானியேல் வரலாறு

தானியேல்

தானியேல் புத்தகம் ஒரு கண்ணோட்டம்



*தானியேல் எனும் பெயரின் பொருள் "கடவுள் என் நீதிபதி"
*தானியேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் דָּנִיֵּאל, (Daniyyel, Dāniyyêl) என்னும் பெயர் கொண்டது.
*தானியேல் தீர்க்கதரிசன நூலில் உள்ள முக்கிய பாத்திரம் "தானியேல்" ஆவார். 
*எருசலேமில் அரச / பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர்.
* தானியேல் சிறுவனாக / வாலிபவயதில் இருக்கும்போது நேபுகாத் நேச்சாரால், பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்
*அரசனால் "பெல்தெஷாத்சார்" (பொருள்- பேல் தேவனின் பிரபு) என்று பெயர் மாற்றப்பட்டாலும், தானியேல் ஒருபோதும் பாபிலானிய முறைக்கு மாறவில்லை. 
*4 அரசர்களுக்கு, தலைமைச் செயலாளராக அரசவைப் பதவி வகித்தவர்.
*கர்த்தர் அருளிய "தெய்வீக ஞானம்" மூலம் அரசனின் கனவுகளையும் தரிசனங்களையும் தெளிவுபடுத்தி, பாபிலோனிய சபையில் முக்கிய நபராகினார். 
*தேவதரிசனத்தினைக் கண்டு, அதன் பொருளை நான்கு பேரரசுகளாக விளக்கி, ராஜாதிராஜா இயேசு கிறிஸ்துவின் ராஜ்ஜியமே என்றும் நிலைத்திருக்கும் என்று கண்டார்.
*தானியேல் வரலாறு, பாபிலோனிய, பாரசீகப் பேரரசுகளின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன.
*உலக வரலாற்றின் மாற்றமெல்லாம் தேவதிட்டமே என்று தானியேல் நூல் அறுதியிடுகிறது.
*எல்லா அரச / வரலாற்றையும் நொறுக்கிப்போடும் "கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல்" லாகிய மேசியா வந்து, தம் அரசை நிலைப்படுத்துவார் என்பதே இப்புத்தகத்த்தின் வெளிச்சம்.
*மேசியாவாகிய கிறிஸ்து தானியேல் குறித்துப் பேசினார். (மத் 24:15, மாற் 13:14)
*தானியேல் புத்தகத்தில், இயேசு கிறிஸ்து, 1) கைகளால் பெயர்க்கப்படாத கல், 2) மனுஷகுமாரன், 3) வெட்டப்படும் மேசியா - வாக குறிக்கப்பட்டுள்ளார்.

இனி தானியேல் தீர்க்கதரிசியின் வாழ்வு பற்றி...

*சுமார் 16 வயதில் சிறைப்பிடிக்கப்பட்ட தானியேலும், நண்பர்களும் அரச உணவை உண்ணமறுத்தனர். காரணம், அதில் ஒரு வித போதை வஸ்து கலக்கப்படும் / விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டபின் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. உணவால் தங்களைத் தீட்டுபடுத்தாமல் காத்துக்கொண்டனர். நாம்?
*தானியேலும் / நண்பர்களும் இக்கட்டான சூழல்களில் கூடி ஜெபிக்கும் பழக்கமுள்ளவர்கள். நாம்?
*தானியேல் காலை; மதியம்; மாலை என தினமும் 3 வேளை, தன் கைகளை உயர்த்தி ஜெபிக்கும் ஜெபவீரன். (ராஜாவே உத்தரவு போட்டாலும் ஜெப ஜீவியத்தில் மாற்றமில்லை) நாம்?
*தேவனுக்கும்; மனித்னுக்கும்; ராஜாவுக்கும் முன்பாக நீதிகேடு செய்யாத ஓர் சிறந்த உண்மை வாழ்வு கொண்டவர் தானியேல்! நாம்?
*தானியேல் நீதியுள்ளவர் என்று சமகால தீர்க்கதரிசி எசேக்கியேல் சொன்னார். (எசே 14:14, 20, 28:3)
*எருசலேமிலிருந்து அநேகர் அடிமைகளாக வந்திருந்தாலும் தனது நண்பர்களாக கர்த்தருக்குப் பயந்து நடக்கும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைத் தேர்ந்தெடுத்தார் தானியேல். நாம்?
*கர்த்தரால் "பிரியமான புருஷன்" என்று சான்றுபெற்றவர் தானியேல்! நாம்?
*தானியேலை விட அதிக ஞானவானாய் இருந்த லூசிபர் பெருமையினால் விழுந்தான்! ஞானம் அதிகரித்தால், தாழ்மை அதிகரிக்கவேண்டும். நாம்?
*சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ ஆகியோர் தீயிலும், தானியேல் சிங்கக் கெபியிலும் விசுவாச உறுதியில் நின்றனர். காக்கப்பட்டனர்! தேவ நாமம் மகிமைப்பட்டது. அவர்களும் கனம் பெற்றனர்.
*சிறைகளும், சிக்கல்களும் விசுவாசத்தை கலைக்கமுடியாது என்று வாழ்ந்து காட்டினர் தானியேலும்; நண்பர்களும். நாம்?

என்றும் நிலைத்திருக்கக்கூடிய ராஜாதி ராஜாவின் ஆட்சியில் பங்குபெற நீங்கள் ஆயத்தமா? இன்றே அர்ப்பணியுங்கள் உங்களை.. பாவமன்னிப்பின் நிச்சயம் பெற்றுக்கொள்ளுங்கள். பரிசுத்தமாய் வாழுங்கள். வேத வார்த்தைகளால், பரிசுத்த ஆவியால் நடத்தப்படுங்கள்! அன்பு செலுத்துங்கள் யாவரிடமும். சேர்ந்திடுவோம் கிறிஸ்துவின் சமூகம்!

பாபிலோன் சிறையிருப்பில் கர்த்தருக்கு உண்மையாய் இருந்த சில யூதர்களின்
வரலாற்றையும் யாவற்றிற்கும் மேலாக தேவனாகிய கர்த்தரே அரசாளுகிறார்
என்பதையும் கூறுவதற்காக.

அக்காலத்துக்கு பின்வரும் சில நூற்றாண்டுகளின் நிகழ்ச்சிகளையும் மேசியா
சங்கரிக்கபடுவதையும் மேசியாவின் இரண்டாம் வருகையின் காலத்தில்
நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளையும் முன்னறிவிக்கவும் எழுதப்பட்டது.

ஆசிரியர் :-

தானியேல்

புத்தகத்தின் காலம் :-

கி.மு.605 முதல் கி.மு.535 வரை

குறிப்பு :-

வேத வல்லுநர்கள் என கருதப்படும் ஒரு கூட்டத்தினர் தானியேல் நூலானது
கி.மு.164ல் (தானியேல் காலத்திற்க்கு 360 ஆண்டுகளுக்கு பின்)
எழுதிமுடிக்கப்பட்டது என்று கூறுவதற்கு துனிந்துள்ளனர். இவர்கள் தானியேல்
நூலிலுள்ள தீர்க்கதரிசனங்களை ஆவியானவர் தானியேலின் மூலம் முன்னுரைத்ததை
மறுக்க முயற்ச்சிக்கின்றனர்.
தானியேல் நூலின் தீர்க்கதரிசனங்களின் பெரும்பகுதி கி.மு.164 இல்
நிறைவேறியதை வைத்து இவ்வாறு கூறுகின்றனர். அதாவது, தானியேல் காலத்திற்கு
360 ஆண்டுகளுக்கு பின், யாரோ ஒருவர், தானியேல் நூலின் வரலாற்று
நிகழ்ச்சிகளை எழுதியுள்ளனர் என்றும் இது ஏமாற்று என்றும் இவர்கள்
கூறுகின்றனர்.
இவர்கள் தீர்க்கதரிசனங்களை நம்பாத அவிசுவாசிகள் மட்டும் அல்ல, வேத
புரட்டர்கள் ஆவார்கள். மேலும், இவர்கள் கூறுவது முட்டாள்தனமானது.
ஏனெனில், பழைய ஏற்பாடு (தானியேல் நூலும்) கி.மு.285 இல் கிரேக்க மொழிக்கு
மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு நூல் எழுதப்படுவதற்கு முன்பே (121
ஆண்டுகளுக்கு முன்பே) மொழிமாற்றம் செய்யப்பட்டது என்று கூறுவது
அறிவீனமன்றோ. வேதத்தை அறிந்தவர்களாக கூறுகிறவர்கள் தவறாக போதித்தால்
அவர்களை கர்த்தர் மதிகேடரே, குருடரே, மாயக்காரரே என்று கூறுவதை (மத்
23:13-36) பகுதியில் வாசித்து பாருங்கள்.

திறவுகோள் வசனங்கள் :-

அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களை தள்ளி,
ராஜாக்களை ஏற்ப்படுத்நுகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு
அறிவைவும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை
வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம்
அவரிடத்தில் தங்கும் (2:21-22)

முக்கிய நபர்கள் :-

தானியேல்

அனனியா (சாத்ராக்)

மிஷாவேல் (மேஷாக்)

அசரியா (
ஆபேத்நேகோ)

பெல்ஷாத்சார்

தரியு

முக்கிய இடங்கள்:-

நேபுகாத்நேச்சாரின் அரண்மனை,

எரிகிற நெருப்பு சூளை,

பெல்ஷாத்சாரின் விருந்து சாலை,

சிங்கங்களின் கெபி,

சூசான் அரண்மனை,

ஊலாய் ஆற்றங்கரை.

புத்தகத்தின் சிறப்பு:-

உலக பேரரசுகளின் சுருக்கமான வரலாறும் இறுதியில் கிறிஸ்துவின் ஆட்சியும்
கூறப்பட்டுள்ளன்.

கொடூரமான அரசனை நேசித்து மனத்தாழ்மையடைய செய்த தேவனின் செயல்க் கூறப்பட்டுள்ளது.

இந்த யுகத்தின் இறுதி நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன.

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்துடன் சேர்த்து படிக்கவேண்டிய பகுதிகள்
இந்த புத்தகத்தில் உள்ளன.

வாழ்க்கை பயனீடு:-

யாருக்காக வாழ்கிறோம், எதற்காக வாழ்கிறோம் என்ற ஒரு நோக்கம் நமக்கு தேவை.
எதிலும் தீட்டுப்படாதபடி நம்மை காத்துக்கொள்ள கவனம் தேவை (1:8-21).

தேவனுக்கு நன்றி சொல்வதற்கு கவனமாக இருப்பதுமட்டும் இல்லாமல், தேவனை
பற்றி மற்றவருக்கு சொல்ல தவறக்கூடாது (2:19-23,27-28; 4:24-26; 5:18-24;
6:22).

எந்த அற்புதத்திற்க்கும் மகிமையை தேவனுக்குச் செலுத்த கவனமாக
இருக்கவேண்டும். எந்த சூழ்ந்நிலையும் உடனடியாக தேவனுடைய உதவியை நாட
வேண்டும் (2:17-18).

தேவனுக்கு எதிராக செயல்பட யார் என்ன கூறினாலும் தைரியமாக மறுக்க
வேண்டும். தேவன் விடுவித்தாலும் இரத்தசாட்சியாய் மரிக்க நேர்ந்தாலும்
விட்டு கொடுக்க கூடாது. (3:13-18)

எல்லா சோதனையிலும் தேவன் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். (சங்
32:8; 1கொரி 10:13; எபி 13:5).

தேவனை பின்பற்றுவதையும் நற்செய்தி அறிவிப்பதையும் குற்றமாக நம்மீது
கூறுவதை தவிர, வேறு எந்த விதத்திலும்க குற்றம் சாட்டப்படாமல்
பரிசுத்தமாய் வாழவேண்டும் (6:4-9,21-22).

எதுவும் யாரும் உங்கள் ஜெப வாழ்க்கையை தடை செய்ய விடாதிருங்கள் (6:10-16)

தேவன் நமக்கு கூறும் இரகசியங்கள் யாவற்றையும் எல்லோருக்கும் கூற வேண்டிய
அவசியம் இல்லை. அவர் கூறும்படி சொன்னால் மட்டும் கூற வேண்டும்
(7:28;12:9)

புதிய ஏற்பாட்டில்:-

தானியேலின் பெயரை இயேசு குறிப்பிட்டு, அந்திகிறிஸ்துவை பற்றி தானியேலின்
தீர்க்கதரிசனத்தின் (9:27) நிறைவேறுதலை உறுதிபடுத்தினார் (மத் 24:15-16)

மற்றவருக்காக மேசியா சங்கரிக்கபடுவார் என்ற தானியேலின் தீர்க்கதரிசனம்
கிறிஸ்துவில் நிறைவேறியுள்ளார் (9:26)

பழைய ஏற்பாடிற்கும் புதிய ஏற்பாடிற்கும் இடைப்பட்ட காலத்து நிகழ்சிகளை
தானியேல் தானியேல் முன்னுரைத்துள்ளார அவை யாவும் நிறைவேறிவிட்டன.
மேசியாவின் உலக அரசையும் (2:44),

பிதாவாகிய தேவன் (நீண்ட ஆயுள்ளவர்) கிறிஸ்துவுக்கு ராஜ்ஜியத்தை
தருவதையும் (7:13-14),

பரிசுத்தவான்கள் அவரோடு ஆட்சி செய்வதையும் (7:18,27),

அந்திகிறிஸ்துவின் செயல்களையும் (7:7-9; 9:26-27; 11:36-45),

உயிர்தெழுதலையும் (12:2,13), நாட்களின் கணக்குகளையும் (9:25-27; 12:7-12).

இந்நூல் முன்னுரைக்கிறது இவற்றை புதிய ஏற்பாடு மீண்டும் விவரிக்கிறது.
இந்நூலுக்கும் வெளிபடுத்தின விசேஷம் நூலுக்கும் அநேக ஒற்றுமைகள் உண்டு.

நூலின் அளவு:-

அதிகாரங்கள் : 12

வசனங்கள் : 357

உட்பிரிவுகள்:- 

Comments