படைப்பிலிருந்து ஜலப்பிரளயம் வரை

PART 1: படைப்பிலிருந்து ஜலப்பிரளயம் வரை

வானமும் பூமியும் எப்படி உண்டாயின? சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எப்படி வந்தன? இந்தப் பூமியில் உள்ள மற்ற எல்லா பொருட்களும் எப்படி வந்தன? அவற்றையெல்லாம் கடவுள் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. அது நூற்றுக்கு நூறு உண்மை. ஆகவே இந்தப் புத்தகத்தின் முதல் கதை படைப்பைப் பற்றி பைபிள் சொல்லும் நிஜக் கதைகளுடன் ஆரம்பமாகிறது.
ஓரளவு தம்மைப் போல் உள்ள ஆவி ஆட்களையே கடவுள் முதன்முதலில் உண்டாக்கினார். அந்த ஆவி ஆட்கள்தான் தேவதூதர்கள். ஆனால் இந்தப் பூமியை மனிதர்களுக்காக கடவுள் படைத்தார். எனவே ஆணையும் பெண்ணையும் கடவுள் உண்டாக்கினார்; அவர்களுடைய பெயர் ஆதாம், ஏவாள். அவர்களை ஓர் அழகிய தோட்டத்தில் குடிவைத்தார். ஆனால் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை, அதனால் தொடர்ந்து உயிர் வாழும் உரிமையை அவர்கள் இழந்தார்கள்.
ஆதாம் படைக்கப்பட்டதிலிருந்து ஜலப்பிரளயம் வரை மொத்தம் 1,656 ஆண்டுகள் கடந்து சென்றன. இந்தக் காலப்பகுதியில் நிறைய கெட்ட ஆட்கள் வாழ்ந்தார்கள். பரலோகத்தில், பிசாசாகிய சாத்தானும் அவனைச் சேர்ந்த கெட்ட தூதர்களும் இருந்தார்கள். இந்த ஆவி ஆட்களை நம்மால் பார்க்க முடியாது. பூமியில், காயீனும் இன்னும் பல கெட்ட ஆட்களும் இருந்தார்கள். இவர்களில் சிலர், பெரிய பயில்வான்களைப் போல இருந்தார்கள். என்றாலும் ஆபேல், ஏனோக்கு, நோவா போன்ற நல்ல ஆட்களும் பூமியில் இருந்தார்கள். ஆக, பகுதி ஒன்றில் இந்த எல்லா ஆட்களையும் சம்பவங்களையும் பற்றி நாம் வாசிப்போம்.

Comments